TREND

“உலகின் மிகப்பெரிய பாலைவனம் சஹாரா இல்லை” - கூகுளின் பதிலால் குழப்பத்தில் மக்கள்

உலகின் மிகப்பெரிய பாலைவனம், ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா என்பது நாம் அறிந்ததே. ஆனால் கூகுளின் சமீபத்திய தகவல் படி சஹாரா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனம் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பாலைவனம், எது என்று கேட்டால் உடனே சஹாரா என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால், சஹாராவை விட பெரிய வறண்ட நிலப்பரப்பு ஒன்று பூமியில் இருப்பதாக கூகுள் கூறியுள்ளது. கூகுளின் இந்த பதிலை நம்ப முடியாமல் நெட்டிசன்கள் குழம்பி போயுள்ளனர். கூகுளின் இத்தகைய கூற்றுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன, சஹாரா இரண்டாவது மிகப்பெரிய பாலைவனம் என்றால், முதல் இடத்தில் இருப்பது எந்த இடம் என்று பல கேள்விகள் நம்முள் எழலாம். இதுபற்றிய தகவலை விரிவாக பார்க்கலாம். பாலைவனம் என்பது தொழில்நுட்ப ரீதியாக, வறண்ட நிலப்பரப்பாகும் மற்றும் அங்கு வருடாந்திர மழைப்பொழிவு என்பது 10 அங்குலத்திற்கும் குறைவாகவே இருக்கும். அதன் வரையறை மணல் திட்டுகள், குறைவான தாவரங்கள் மற்றும் மனதில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தைப் பற்றிய ஒரு சிந்தனையை விட்டுச்செல்கிறது. அப்படி இருக்க, பனியால் மூடப்பட்டிருக்கும் ஒரு பகுதியை தான் கூகுள் உலகின் மிகப்பெரிய பாலைவனம் என்று கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிக்க: நாளை பூமியை மிகவும் நெருங்கும் 2 பெரிய விண்கற்கள்… பாதிப்பை ஏற்படுத்துமா? கூகுளின் கூற்றுப்படி, சஹாரா மிகப்பெரிய பாலைவனம் அல்ல, அண்டார்டிகா தான் உலகின் மிகப்பெரிய பாலைவனம் என்பதை அறிந்த யூசர்கள், உண்மையை ஒப்புக்கொள்ள முடியாமல் திகைத்துப் போனார்கள். கூகுளின் பிரச்சாரத்தின் போது இந்த கேள்வி எழுந்தது. இது கவர்ச்சிகரமான தேடல்களை வேடிக்கையான, விளையாட்டு அனுபவமாக மாற்றும் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு சிறப்பு முயற்சியாகும். சமீபத்தில், அண்டார்டிகா உலகின் மிகப்பெரிய பாலைவனம் என்று ‘கூக்ளி’ அளித்த பதில் யூசர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து கூகுள் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, “பாலைவனம் என்பது மிகக் குறைந்த மழையைப் பெறும் நிலப்பரப்பாகும், பொதுவாக ஒரு வருடத்திற்கு 10 அங்குலங்களுக்கும் குறைவான மழை அங்கு பதிவாகும், இந்த தீவிர வறட்சியின் காரணமாக அரிதான தாவரங்களைக் கொண்ட ஒரு வறண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.” கூகுள் சர்ச் இஞ்சின் இதுகுறித்து விளக்கியதாவது, “பெரும்பாலும் பனியால் சூழ்ந்துள்ள அண்டார்டிகா, ஆண்டுக்கு சராசரியாக 6.5 அங்குல மழைப்பொழிவையே பெறுகிறது. இதன் உட்புறம் வறண்டு காணப்படும், அங்கு ஆண்டுக்கு 2 அங்குலங்களுக்கும் குறைவாகவும், அதன் கடலோரப் பகுதிகள் 8 அங்குலங்களுக்கும் அதிகமாகவும் மழைப்பொழிவை பெறுகின்றன. இந்த காரணங்களால், அண்டார்டிகா கண்டம் ஒரு துருவ பாலைவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது மணல் திட்டுகளுக்கு பதிலாக பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். இது சஹாரா பாலைவனத்தை விட பூமியின் வறண்ட இடங்களில் ஒன்றாகும். அதில் உள்ள மிக்முர்டோ உலர் பள்ளத்தாக்குகள் கிரகத்தின் வறண்ட மற்றும் அதிக காற்று வீசும் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட ஒன்றாகும். பூமியின் மொத்த நிலப்பரப்பில் 9.4 சதவீதத்தை அண்டார்டிகா கொண்டுள்ளது. இது சஹாராவை விட அதிகமானது, சஹாரா நிலப்பரப்பின் 8 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. இது ஆஸ்திரேலியாவை விட இரண்டு மடங்கு பெரியது. அதன் மக்கள்தொகையை பொறுத்த வரையில், கோடையில் சுமார் 5,000 பேர் முதல் குளிர்காலத்தில் 1,000 பேர் வரை என பருவத்திற்கு பருவம் மாறுபட்டு இருக்கும். பூமியின் காலநிலை மற்றும் கடல் அமைப்புகள் உள்ளிட்டவைகளால், இந்த இடம் அறிவியலில் ஆழமான தாக்கத்தை கொண்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.