TREND

தகர டப்பாக்குள் தலையை விட்டு சிக்கித் தவித்த கரடிக்குட்டியை மீட்ட இந்திய ராணுவம்... குவியும் பாராட்டு!

தகர டப்பாக்குள் தலை சிக்கிய நிலையில் சிக்கித் தவித்த கரடிக்குட்டியை இந்திய இராணுவம் மீட்டெடுத்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், வனவிலங்குகளை பாதுகாப்பதில் ராணுவத்தின் கருணை மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தகர டப்பாக்குள் தலையை விட்டு எடுக்க முடியாமல் தவித்த இமாலய பழுப்பு நிற கரடிக் குட்டியை இந்திய இராணுவம் சமீபத்தில் மீட்டது. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பயந்துபோன கரடிக் குட்டியை ராணுவ வீரர்கள் அமைதியாகவும், கவனமாகவும் விடுவித்து, அது பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்தனர். மீட்புப் பணி நடந்த சரியான இடம் பகிரப்படவில்லை என்றாலும், இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் கடினமான பணிச்சூழல்களை அந்த வீடியோவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எண்ணெய் டப்பாவினுள் தலை சிக்கியிருந்த குட்டியைப் பார்த்த வீரர்கள், அதன் கஷ்டத்தை உணர்ந்து சரியான திட்டமிடலுடன் அந்த கரடியை நெருங்கினர். மேலும் கரடி பயப்படாமல் இருப்பதற்காக சரியான உத்திகளை கவனமாக கையாண்டனர். இதன்காரணமாக கரடியை நோக்கி முன்னேறுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. கரடிக்கு அருகில் செல்வதற்காக வீரர்கள் பனி மூடிய நிலப்பரப்பு வழியாகச் சென்றபோது, ​​நிகழ்ந்த பதற்றத்தை அந்த வீடியோ மூலம் காணமுடிகிறது. இறுதியாக கரடிக்கு அருகில் அவர்கள் நெருங்கிய பிறகு, நிலைமையை புரிந்து கொண்டு, கைமுறையாக டப்பாவை அகற்ற முயன்றனர். பின்னர் அந்த குழு கரடியை அருகில் இருந்த ஒரு கொட்டகை போன்ற இடத்துக்கு அழைத்துச் சென்று குட்டியின் கழுத்தில் உள்ள டப்பாவின் பிடியை தளர்த்த ஒரு கட்டிங் பிளேடு போன்ற ஒரு நிப்பரைப் பயன்படுத்தினர். இதையடுத்து, கரடிக் குட்டி வெற்றிகரமாக மீட்கப்பட்டது, இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட கரடிக்கு ராணுவ வீரர்கள் உணவளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ வீரர்களைப் பார்த்து பயப்படாமல் நின்ற கரடி, நம்பிக்கையுடன் பல மணிநேரம் அவர்களுடன் நெருக்கமாக இருந்தது. இறுதியாக, காட்டுக்குள் விடப்பட்ட அந்த கரடிக் குட்டி, காட்டிற்குள் அலைந்து திரிந்தபோது அனைவருக்கும் ஒரு மன நிறைவான சூழல் இருந்தது. Indian army troops rescuing a Himalayan bear somewhere near their forward post🙌 pic.twitter.com/nntLEnn0se இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பகிரப்பட்டது, இந்த வீடியோவை 1,70,000 பேர் பார்த்துள்ளனர். வீரர்களின் புத்திசாலித்தனம் மற்றும் கருணைக்காக மக்கள் அவர்களைப் பாராட்டியுள்ளதால் இந்த வீடியோ கவனத்தைப் பெற்றுள்ளது. நாட்டை மட்டுமின்றி உள்ளூர் விலங்கினங்களையும் பாதுகாப்பதில் இந்திய இராணுவத்தின் அர்ப்பணிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்திய இராணுவத்தின் இந்த மனிதாபிமானம் மிக்க செயலை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பயனர், “இந்திய இராணுவத்துக்கு நன்றி. முதலில் அந்த டப்பா எப்படி அங்கு வந்தது என்பதைக் கண்டுபிடித்து, அப்படிக் கொட்டப்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்." என்றும், மற்றொருவர், “மிகப்பெரிய முயற்சி, உங்களுக்கு நன்றி” என்றும் கருத்து தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.