TREND

ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்க போஸ் கொடுத்தபோது தவறி விழுந்த இளம்பெண்...! வைரலாகும் வீடியோ...

பொது வெளிகளில் எண்ணற்ற செல்ஃபிக்கள் எடுப்பது, ரீல்ஸ்களை உருவாக்குவது மற்றும் வ்லாக்ஸ் தயாரிப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் இப்போது சகஜமான ஒன்றாகி விட்டன. இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வைரலாகும் முயற்சியில், சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையும், சில சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதையும் கூட பார்க்க முடிகிறது. சோஷியல் மீடியா மோகம் உச்சத்தில் இருப்பதே இதுபோன்ற விஷயங்களுக்கு மூலக் காரணமாக உள்ளது. சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ, பெண் சுற்றுலா பயணி ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் படிக்கட்டுக்கு அருகே நின்று, தன்னை மறந்து ரீல்ஸ்-காக கீழே தொங்குவதுபோல போஸ் கொடுத்தபோது மரத்தில் அடிபட்டு கீழே விழுந்த ஒரு திகிலூட்டும் தருணத்தை காட்டுகிறது. ஆனால், இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெறவில்லை. நம் அண்டை நாடான இலங்கையில் நிகழ்ந்துள்ளது. ரீல்ஸ் மோகத்தில் விபத்தில் சிக்கியவர் இலங்கையை சேர்ந்தவரும் இல்லை. அவர் சீனாவை சேர்ந்த இளம்பெண் என்பதும் தெரியவந்துள்ளது. ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ஓடும் ரயிலில் கதவுக்கு வெளியே தலையை பின்புறமாக நன்கு சாய்த்து போஸ் கொடுத்தபோது, ரயிலுக்கு வெளியே இருந்த ​​சில மரக்கிளைகள் அவரது தலையில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நிலைகுலைந்த அந்தப் பெண் அப்படியே ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுவதை இந்த வைரல் வீடியோ காட்டுகிறது. மேலும், அந்த சீன பெண்ணை ரீல்ஸிற்காக படம் பிடித்த நபர், மரக்கிளை மோதி ஓடும் ரயிலில் இருந்த அந்த பெண் கீழே விழுந்ததால் அதிர்ச்சியில் அலறுவதும் பின்னணியில் கேட்கிறது. இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள Dailystar “அடுத்த ஸ்டாப்பில் ரயில் நிறுத்தப்பட்டதாகவும், பயணிகள் பாதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு உதவ அவர் விழுந்த இடத்திற்கு திரும்பச் சென்றதாகவும் அதிர்ஷ்டவசமாகஅந்த பெண்ணுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் வைரல் வீடியோ கீழே… இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான பிறகு, பல சோஷியல் மீடியா யூஸர்கள் அந்த பெண்ணை பொறுப்பற்றவர் என்று திட்டி தீர்த்துள்ளனர். ஒரு சிலரை பார்க்கும்போது நான் ஆச்சரியப்படுகிறேன், அவர்களின் காதுகளுக்கு இடையில் என்ன தான் இருக்கிறது என்று யோசிக்கிறேன் என ஒரு யூஸர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூஸர், “என்ன ஒரு முட்டாள் பெண்” என்று கருத்து தெரிவித்துள்ளார். “எல்லாவற்றிலும் முட்டாள்தனம்” என்று வேறொரு யூஸர் கமென்ட் செய்துள்ளார். ரயில் அடுத்த ஸ்டேஷனை அடைந்ததும் அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக பல பயணிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம், ஒரு பெண் தனது குழந்தையின் உயிரைப் பணயம் வைத்து எடுத்த ரீல்ஸ் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது நினைவிருக்கலாம். இதையும் படிக்க: ஆணின் முகம்… வாளிகளை வைத்திருக்கும் பெண்… நீங்கள் முதலில் எதை பார்க்கிறீர்கள்? - உங்கள் ஆளுமையை சொல்லும் ஆப்டிகல் இல்யூஷன்! அந்தப் பெண் தனது பெண் குழந்தை சாலையை நோக்கி ஓடுவதை கூட கவனிக்காமல் ரீல்ஸிற்காக டான்ஸ் ஆடினார். ஆனால் நல்வாய்ப்பாக அந்த பெண்ணின் மூத்த மகன் தந்து தனது சகோதரி சாலையை நோக்கி ஓடுவதை தனது தாயிடம் (ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம்) சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து குறுநடை போடும் தனது பெண் குழந்தையை, விரைந்து சென்று சாலைக்கு செல்லாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.