TREND

ரூ.10 மதிப்புள்ள வாட்டர் பாட்டிலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த Zomato..! நெட்டிசன்கள் கடும் கண்டனம்...

சொமேட்டோவில் 10 ரூபாய் மதிப்பிலான வாட்டர் பாட்டில் ரூ.100க்கு விற்கப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொது நிகழ்ச்சிகளில், வணிகர்கள் வழக்கமாக நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்கிறார்கள். கண்காட்சிகள், சபாக்கள் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில், அவை எம்ஆர்பியைப் பொருட்படுத்தாமல் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ரூ.10 மதிப்புள்ள வாட்டர் பாட்டில் அல்லது பிஸ்கட் பாக்கெட்டுகள் ரூ.15 அல்லது ரூ.20க்கு விற்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சொமேட்டோ நிறுவனம் ரூ.10 மதிப்புள்ள அரை லிட்டர் வாட்டர் பாட்டிலை ரூ.100க்கு விற்பனை செய்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து சொமேட்டோவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சொமேட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. How is @zomato allowed to sell Rs. 10 water bottles for Rs. 100 at concert venues where no one is allowed to bring their own bottles? @VijayGopal_ pic.twitter.com/clQWDcIb7m சமீபத்தில் ஈவா லைவ் என்ற நிறுவனம் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் பார்ட்னராக சொமேட்டோ உள்ளது. அதே நிகழ்ச்சியில், சொமேட்டோ நிறுவனம் ஒரு சிறப்பு ஸ்டால் அமைத்து வாட்டர் பாட்டில்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்யத் தொடங்கியது. இந்த விற்பனையில், ரூ.10 மதிப்புள்ள அரை லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு ரூ.100க்கு விற்பனை செய்ததற்கு ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களை தங்கள் சொந்த வாட்டர் பாட்டில்களை கொண்டுவர ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை. இதையும் படிக்க: பார்களில் மதுபானம் ஏன் ‘பெக்’ என்ற அளவால் அளவிடப்படுகிறது? இதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? இதன் காரணமாக இந்த இசை நிகழ்ச்சியில் ரூ.10 மதிப்புள்ள வாட்டர் பாட்டில்கள் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலைக்கு சொமேட்டோ விற்க அனுமதித்தது யார்? என்று பல்லப் டே என்ற யூசர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவரிடம் இரண்டு அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள் ரூ.200க்கு வசூலிக்கப்பட்டது. மேலும், அவர் வாட்டர் பாட்டில்கள் விற்கும் கடையின் புகைப்படங்களுடன் தொலைபேசி கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து தெலங்கானா உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் டேக் செய்து இந்த போஸ்டை பதிவு செய்திருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சொமேட்டோ நிறுவனம் பல்லபின் பதிவிற்கு பதிலளித்துள்ளது. “ஹாய் பல்லப், சிரமத்திற்கு மன்னிக்கவும். இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஒரு டிக்கெட் பார்ட்னர் மட்டுமே. உங்கள் வலி எங்களுக்குப் புரிகிறது. எங்களின் சொந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, ​​இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வோம்” என்று பதிலளித்திருந்தது. இதையும் படிக்க: Astronaut Salary | விண்வெளி வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்! இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் கடுமையாக கொந்தளித்து வருகின்றனர். zomato-வின் நடத்தை பயங்கரமானது. இது உண்மையில் நுகர்வோரை சுரண்டுவதாக இருக்கும். இந்த அமைப்புக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று ஒரு நெட்டிசன் பதிலளித்துள்ளார். உடனடியாக நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யுங்கள், மக்களை துன்புறுத்தும் சொமேட்டோ நிறுவனத்திற்கு தகுந்த அறிவுரை கூறுங்கள், கொள்ளையடித்த தொகையை மீட்டுத் தாருங்கள் என மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.