சமீபத்தில், QR குறியீட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்துவதால் நிறைய மோசடிகள் நடக்கின்றன. ஒரு வகையில் இதை ஆன்லைன் மோசடி என்றும் சொல்லலாம். டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, பல வணிகர்கள் Phonepe மற்றும் Google Pay QR கோட்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் சிலர் வியாபாரிகளின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி மோசடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு vlogger தனது வீடியோ மூலம் QR கோட் மூலம் எப்படி மோசடி செய்யப்படுகிறது என்று விளக்கியுள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால், அவரது வீடியோ பொழுதுபோக்காகத் தெரிந்தாலும், அது மக்களை எச்சரிப்பது போலவும், ஆன்லைன் மோசடிகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துவது போலவும் இருக்கிறது. ஆர்யன் பர்வார் என்ற இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் சீரியஸாகவும் இருப்பதால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, ஆர்யன் சில கடைகளுக்குச் சென்று தனது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட QR கோட்-இன் படத்தை கடைக்காரரின் QR கோட்-இல் ஒட்டுகிறார். இதனையடுத்து கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் அவருடைய QR கோட்-ஐ ஸ்கேன் செய்து ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பணம் நேரடியாக ஆர்யனின் கணக்கில் வந்து சேரும். இதேபோன்ற உத்தியை ஆர்யன் துணிக்கடை, ஸ்லிப்பர் ஷோரூம், ஸ்கூட்டர் ஷோரூம் மற்றும் மொபைல் ஆக்சஸரீஸ் ஸ்டோரில் பயன்படுத்துவதை வீடியோவில் காணலாம். ஆர்யன் ஒவ்வொரு கடையிலிருந்தும் சிரித்துக்கொண்டே வெளியே வருவதையும் வீடியோவில் காணலாம். இதனையடுத்து ஆர்யன் வீட்டிற்கு வந்து பேங்க் பேலன்ஸ்-ஐ சரிபார்த்தார். அப்போது ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கட்டண அறிவிப்புகள் அவரது மொபைல் போனில் நிரம்பி வழிகின்றன. மிகக் குறுகிய காலத்தில் மோசடி மூலம் பெரும் தொகையை வசூல் செய்கிறார். இந்த மோசடி நிச்சயமாக கடைக்காரருக்கு நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபோன்ற மோசடிகள் உண்மையில் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. பணம் செலுத்தும் முன், மக்கள் பொதுவாக பெறுநரின் பெயரை, குறிப்பாக கடைக்காரரின் பெயரைச் சரி பார்க்க வேண்டும். இந்த பரிவர்த்தனையின் போது ஆர்யனின் பெயர் வந்திருந்தால் அவரது மோசடி அம்பலமாகியிருக்கும் என நெட்டிசன்கள் பலர் கூறினர். எல்லாவற்றையும் மீறி ஆர்யன் என்ற மனிதனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி 5 கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது தவிர லட்சக்கணக்கான லைக்குகள், ஷேர்களையும் மற்றும் கருத்துகள் பெற்றுள்ளது. பொதுவாக ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் போது வியாபாரியின் பெயர்களைச் சரிபார்ப்பதாகக் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். மக்களை நகைச்சுவையாக எச்சரித்ததற்காக மற்றொரு நெட்டிசன் அவரை பாராட்டினார். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஒருவர் எச்சரித்துள்ளார். மற்றவர்கள் அந்த வீடியோவை போலி என்று கூறியுள்ளனர். None
Popular Tags:
Share This Post:
ரயிலின் மேல் ஸ்டண்ட் செய்த இன்ஸ்டா பிரபலம்.. லைக்ஸ்க்காக எடுத்த விபரீத முடிவு!
December 20, 2024வரலாற்றில் மிக மோசமான நாள் எது? - 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு தெரியுமா?
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 18, 2024
-
- December 18, 2024
-
- December 16, 2024
Featured News
உயிரிழந்த பின்னரும் ரூ. 5000 கோடி சம்பாதிக்கும் விஐபி… அவர் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 15, 2024
நாளை பூமியை மிகவும் நெருங்கும் 2 பெரிய விண்கற்கள்… பாதிப்பை ஏற்படுத்துமா?
- By Sarkai Info
- December 15, 2024
Latest From This Week
QR கோட் மூலம் நடக்கும் மோசடியை காட்டும் வீடியோ! இது விழிப்புணர்வா?
TREND
- by Sarkai Info
- December 13, 2024
இரு தலையுடன் இருக்கும் உயிரினம்; இது என்ன விலங்கு தெரியுமா?
TREND
- by Sarkai Info
- December 13, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.