TREND

திருமண அழைப்பிதழில் புது ஐடியா... குழப்பமடைந்த உறவினர்கள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

சமீபத்தில் திருமண அழைப்பிதழ் ஒன்று அதன் அசாதாரண வடிவமைப்பிற்காக வைரலாகி வருகிறது, இந்த திருமண அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாங்கியதும் முதலில் குழப்பமடைகின்றனர். பலர் திருமண அழைப்பிதழை பார்த்ததும் முதலில் அதை ஆதார் அட்டை என்று தவறாகக் கருதினர், பின்பு அதை படித்து பார்த்த பிறகு தான் அதை திருமண அழைப்பிதழ் என்பதை உணர்கின்றனர். முன்னதாக, திருமண அழைப்பிதழ்களில் மிகவும் எளிமையாகவும், பரம்பரியமாகவும் இருந்தன, அதில் கடவுள் படம் மற்றும் திருமணம் தொடர்பான அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போது காலம் மாறி திருமண அழைப்பிதழ்களில் மக்கள் பல்வேறு வகைகளில் வடிவமைத்து வருகின்றனர். சமீபத்தில், அப்படிப்பட்ட ஒரு திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. இது உண்மையில் ஆதார் அட்டை போல் தெரிகிறது. நிச்சயமாக, அது யாருடைய வீட்டுக்குப் போனாலும், அவர்களுடைய புதிய ஆதார் கார்டு வீட்டுக்கு வந்துவிட்டதாக தான் முதலில் உணர்ந்திருப்பார்கள். சமீபத்தில் டிகே சர்தானா (@dksardana) என்ற யூசர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதைப் பார்க்கும் போது, ​​அது அனேகமாக யாரோ ஒருவரின் ஆதார் அட்டையாக இருக்கலாம் என்று உணர்வீர்கள். ஆனால் கூர்ந்து கவனித்தால் தான் இது திருமண அட்டை என்பது புரியும். “ஹேப்பி மேரேஜ்” என்று அட்டையின் மேல் எழுதப்பட்டுள்ளது. மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயர்கள் கீழே உள்ளன. மணமகனின் பெயர் பிரஹலாத், மணப்பெண்ணின் பெயர் வர்ஷா என்பதாகும். இவர்கள் இருவரும் மத்திய பிரதேச மாநிலம் பிபரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த வைரலான திருமண அட்டையில் ஆதார் எண் இருக்க வேண்டிய இடத்தில் அவர்களது திருமண தேதி அச்சிடப்பட்டுள்ளது. புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில், தாங்கள் ஜோடியாக இருக்கும் பாஸ்போர்ட் போட்டோவை போடுகிறார்கள். இவர்களது திருமணம் 22 ஜூன் 2017 அன்று நடந்தது. இதனுடன், ஒரு QR கோட் மற்றும் பார் கோட் ஆகியவை அட்டையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கவனமாக திட்டமிடுவதன் மூலம், திருமண அட்டை உண்மையான ஆதார் அட்டையை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வித்தியாசமான திருமண அழைப்பிதழ்கள் வைரலாவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், ஒரு தம்பதியினர் தங்கள் திருமண அட்டையை மேக்புக் ப்ரோ லேப்டாப் போல வடிவமைத்துள்ளனர். இந்த புகைப்படமும் மிகவும் பிரபலமானது. இப்போதெல்லாம் திருமண அட்டைகளில் இதுபோன்று விசித்திரமான வகையில் வடிவமைப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த படம் பழையது என்றாலும், திருமண சீசனில் நெட்டிசன்கள் கண் முன் மீண்டும் மீண்டும் வருகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.