TREND

இனி ஆதார் மோசடி பற்றி கவலையே இல்ல... இருக்கவே இருக்கு மாஸ்க்டு ஆதார்!!!

ஆதார் அட்டையை வைத்து நடைபெறும் மோசடிகள் சமீப சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. மோசடிக்காரர்கள் மக்களின் ஆதார் எண்களை திருடி அதன் மூலமாக அவர்களுடைய பொருளாதார விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். இந்த கிரிமினல்கள் OTP, CVV, மற்றும் வங்கி தகவல்கள் போன்ற பாதுகாப்பு அமைப்புகளை நவீன முறைகள் மூலமாக திருட ஆரம்பித்து விட்டனர். அப்படி அதிக அளவில் மோசடி நடைபெறும் ஒன்று ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம் (AePS). இதில் மோசடிக்காரர்கள் போலியான சிலிக்கான் கைரேகைகளை பயன்படுத்தி அதிகாரப்பூர்வமற்ற பயோமெட்ரிக் சாதனங்கள் மூலமாக ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் விவரங்களை நகலெடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடுகின்றனர். எனவே இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு ஆதார் பயனர்கள் தங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்து வைக்கும்படி நிதி நிறுவனங்கள் ஆலோசனை கூறுகின்றன. மேலும் மாஸ்க்டு ஆதாரை முடிந்தவரை பயன்படுத்துவது நல்லது என்று பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? உங்களுடைய பிரைவசியை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டையின் ஒரு பதிப்பு மாஸ்க்டு ஆதார். இது உங்களுடைய ஆதார் நம்பரில் முதல் 8 இலக்கங்களை மறைத்து விட்டு, கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும். மேலும் பிற விவரங்களான உங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் QR கோடு போன்றவை அனைவரும் பார்க்கும்படி இருக்கும். ஏன் மாஸ்க்டு ஆதாரை ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த ஆதார் அட்டையில் உங்களுடைய ஆதார் நம்பர் மறைக்கப்பட்டு இருப்பதால் மோசடி ஏற்படுவதை இது குறைக்கிறது. இது உங்களுடைய முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக வைக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் அடையாள சரிபார்ப்புக்கு மாஸ்க்டு ஆதாரை ஏற்றுக் கொள்கின்றனர். பாதுகாப்பு கருதி உங்களுடைய முழு ஆதார் நம்பருக்கு பதிலாக நீங்கள் மாஸ்க்டு ஆதாரை வழங்கலாம். மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்துவது எப்படி? UIDAI வெப்சைட்டில் இருந்து மாஸ்க்டு ஆதாரை PDF ஆக டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்தவுடன் அதனை பிரிண்ட் செய்து, ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறது அங்கு இதனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுடைய ஆதார் விவரங்களை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியமாக பிறருக்கு பகிரலாம். மாஸ்க்டு ஆதார் எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுமா? ஆம், அடையாள சான்றிதழாக ஆதார் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் நீங்கள் மாஸ்க்டு ஆதாரை வழங்கலாம். ஆனால் ஒரு சில இடங்கள் உதாரணமாக வங்கி KYC, அரசு மானியங்கள் போன்றவற்றிற்கு முழு ஆதார் நம்பரை வழங்குவது அவசியம். ஹோட்டல் புக்கிங், பயணம், வேலை சம்பந்தப்பட்ட சரிபார்ப்பு போன்றவற்றிற்கு நீங்கள் மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம். இதையும் படிங்க: உலகின் 16% நிலத்தை தன்வசம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்… யார் தெரியுமா? மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி? * என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்லவும். *அங்கு ‘மை ஆதார்’ பிரிவின் கீழ் உள்ள ‘டவுன்லோட் ஆதார்’ என்பதை கிளிக் செய்யவும். *இப்போது உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 16 இலக்க வெர்சுவல் ஐடியை என்டர் செய்யவும். *இதனுடன் உங்களுடைய முழு பெயர், மின்னஞ்சல் குறியீடு மற்றும் செக்யூரிட்டி கோடு போன்ற விவரங்களையும் நிரப்பவும். *‘செலக்ட் யுவர் பிரிஃபரென்ஸ்’ என்ற பிரிவில் உள்ள ‘மாஸ்க்டு ஆதார்’ ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். *உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP பெறும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். *சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்யவும். இப்போது பாஸ்வேர்டு மூலமாக பாதுகாக்கப்பட்ட PDF வடிவத்தில் உள்ள உங்களுடைய மாஸ்க்டு ஆதாரை உங்களால் டவுன்லோட் செய்ய முடியும். எப்பொழுதும் உங்களுடைய மாஸ்க்டு ஆதார் ஆவணத்தை பாதுகாப்பாக வைக்கவும். அதிகாரபூர்வமற்ற நபர்களிடம் இதனை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.