TREND

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்: மலையில் மறைந்திருக்கும் பனி சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா...?

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஒருவகையில் புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட இதை சொல்லலாம். மனித மனங்களை குழப்புவதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் நோக்கம். உங்கள் அறிவுத்திறன், பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும் போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் படத்தை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும்போதும், நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்கிறது. அப்படியொரு புதிரான படத்தைதான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த முறை கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கரடுமுரடான செங்குத்தான மலைப்பகுதி உள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரம் செடிகள் இல்லாத பகுதி இது. இங்கு ஒரு பனிச் சிறுத்தை மட்டும் உங்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்துள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். இதோ கீழே கொடுத்துள்ள இமேஜை நன்றாகப் பாருங்கள். கூரிய பார்வைத்திறன் உள்ளவர்களால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும் பெரியவர்களும், சிறியவர்களும் விளையாடும் வகையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரமான மலைகளும் செங்குத்தான பள்ளங்களும் நிறைந்துள்ள இந்தக் காட்டுப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் பனிச் சிறுத்தை ஒளிந்து கொண்டுள்ளது. ஆனால் நாம் நினைப்பதுபோல் இதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் பனிச் சிறுத்தையின் நிறமும் பழுப்பு நிறமாகவே உள்ளது. மலைப்பகுதியும் இதே நிறத்திலேயே உள்ளது. ஆனால், மலையின் அடிவாரத்தில் ஒவ்வொரு பள்ளத்தையும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு பார்த்தால் உங்களால் ஓரளவிற்கு கண்டுபிடிக்க முடியும். இன்னும் உங்களுக்கு தெரியவில்லையா? சரி, ஒன்றும் பிரச்சனையில்லை. இதோ நீங்கள் எளிதில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பனிச் சிறுத்தையை வட்டமிட்டு காட்டியுள்ளோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நீங்கள் சில நொடியில் கண்டுபிடித்திருந்தால், உங்கள் கண் பார்வையும் புத்திக்கூர்மையும் சிறப்பாக உள்ளதாக அர்த்தம். இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, உங்கள் அறிவுத்திறன் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இதையும் படிக்க: பார்களில் மதுபானம் ஏன் ‘பெக்’ என்ற அளவால் அளவிடப்படுகிறது? இதை நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? சில குறிப்பிட்ட கலவைகளில் நிறம், வெளிச்சம், வடிவம் ஆகியவை நிறைந்திருப்பதால், படத்தில் இல்லாதது இருப்பது போலவும், இருப்பது இல்லாதது போலவும் நமக்கு தெரிகிறது. சரி, இப்போது சொல்லுங்கள், உண்மையாகவே நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பனிச்சிறுத்தையை கண்டுபிடித்தீர்களா இல்லையா? None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.