TREND

அடர்ந்த காட்டை பார்த்தபடி இருக்கும் கண்ணைக் கவரும் கண்ணாடி மாளிகை; வைரலாகும் வீடியோ...

கட்டடக் கலைஞர் தாமஸ் ஆபிரகாம் வடிவமைத்த பெங்களூருவில் உள்ள கண்ணைக் கவரும் கண்ணாடி மாளிகையை இணையத்தில் பார்த்த அனைவருமே கிறங்கிப் போயுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கண்ணாடி மாளிகை குறித்து பிரபல கன்டன்ட் கிரியேட்டர் பிரியம் சரஸ்வத் வெளியிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தக் கண்ணாடி மாளிகையில் வசித்துவரும் ஆபிரகாம், சரஸ்வத்திற்கு தனது அழகான வீட்டை பிரத்யேகமாக சுற்றிக் காட்டினார். அவருடைய படைப்பை “மிகவும் நவீனமானது; அதே சமயத்தில் மிகவும் பாரம்பரியமானது” என்று அவர் விவரித்துள்ளார். இந்த வீடு காற்றாலைகளால் சூழப்பட்டுள்ளது. இது மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமின்றி, மற்றவர்களின் பார்வைக்கு வீட்டையும் அழகானதாக மாற்றியுள்ளது. இந்த கண்ணாடி மாளிகையின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, வீட்டின் மையத்தில் இருக்கும் நீச்சல் குளம். ஆனால், இது வழக்கமான குளம் போல் அல்லாமல் கிணறு போல கீழே ஆழமாக செல்கிறது. இது அழகியல் மற்றும் செயல்பாட்டின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. கண்ணாடி அடுக்குகளுக்கு இடையில் வளரும் செடிகளை பார்க்கும்போது, எந்தவித இடர்பாடின்றி கட்டடக் கலையை இயற்கையுடன் இணைக்கும் வகையில் இந்த வீடு உள்ளது. 27 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான ஹால் உள்ளது. அதில் தி க்ரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா மீதான ஆபிரகாமின் காதலால் ஈர்க்கப்பட்ட ஒரு சிங்கம் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டின் அழகை இன்னும் அதிகமாக்குவது இங்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு. இது பலரின் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. சற்று பள்ளமான லிவிங் ரூம் நெருக்கமான அமைப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் சாப்பிடும் பகுதியில் இருக்கும் கண்ணாடி சுவர்கள் வழியாக காடுகளில் சுற்றுத்திரியும் மான், மயில்கள் மற்றும் கீரிப்பிள்ளை போன்ற வனவிலங்குகளின் அற்புதமான வன காட்சியை நமக்கு வழங்குகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆபிரகாமின் உன்னதமான வடிவமைப்பிற்காக அவரை மனதார பாராட்டி வருகின்றனர். “பிரமாதமான பேலியோ நவீன கண்ணாடி வீட்டை வடிவமைத்த கட்டடக் கலைஞர் தாமஸ் ஆபிரகாமுக்கு என்னுடைய பாராட்டுகள்! நவீன கண்ணாடி அழகியல் மற்றும் பழமையான கவர்ச்சியின் அற்புதமான இணைவு இது. தைரியமான, வெளிப்படையான பார்ப்பவரை கவரும் படைப்பாற்றல், நீடித்த நிலையான வடிவமைப்பை நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது” என ஒரு பயனர் தனது கருத்தை கூறியுள்ளார். இதையும் படிக்க: ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்: மலையில் மறைந்திருக்கும் பனி சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா…? “நான் இதுவரை பார்த்த வீட்டில் இதைத்தான் சிறந்ததாக நினைக்கிறேன். மிகவும் தனித்துவமான மற்றும் அற்புதமான வடிவமைப்பு. இதை நான் மிகவும் நேசிக்கிறேன்” என இன்னொரு யூசர் கூறியுள்ளார். இன்னும் பலர் கண்ணாடி மாளிகையின் இத்தகைய அழகான யோசனை மற்றும் இதன் சிறந்த செயலாக்கத்தையும் பாராட்டினர். அதுமட்டுமின்றி இதை “தலைசிறந்த படைப்பு” என்றும் அழைத்தனர். இதையும் படிக்க: ரூ.10 மதிப்புள்ள வாட்டர் பாட்டிலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த Zomato..! நெட்டிசன்கள் கடும் கண்டனம்… “இது சொர்க்கத்துக்கான படிக்கட்டு போன்றுள்ளது!! இது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று மற்றொரு யூசர் கூறியுள்ளார். பெங்களூரு அனகலபுராவில் அமைந்துள்ள இந்த கண்ணாடி மாளிகையை, ஆறு வருடம் கஷ்டப்பட்டு தனது அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பில் வடிவமைத்துள்ளார் தாமஸ் ஆபிரகாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.