TREND

உலகின் 100 சிறந்த உணவு நகரங்கள் இவைதான்.. டாப் 10-ல் இடம் பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா?

ஒரு பிராந்தியத்தில் இருந்து மற்றொரு பிராந்தியம், வேறொரு நாடு என மக்கள் செய்யும் பயணம் உலகெங்கிலும் மறக்கமுடியாத பல கலாச்சார அனுபவங்களை வழங்குகிறது. அதேபோல் பல்வேறு நாடுகளின் உணவுகள் வேறுவேறாக இருந்தாலும் உணவு உலக மக்களை ஒன்றிணைக்கிறது. சுற்றுலா பயணிகள் உணவு ஆர்வலர்களாக இருந்துவிட்டால் போதும், அவர்கள் செல்லும் நாடுகளில் கிடைக்கும் உள்ளூர் உணவுகள் அவர்களின் பயணத்தின் பல அம்சங்களில் ஒன்றாக இல்லாமல் அது பெரும்பாலும் அவர்களின் பயணத்தின் சிறப்பம்சமாக மாறிவிடும். ஹில்டன்-இன் சமீபத்திய அறிக்கையின்படி, ஐந்தில் ஒருவர் புதிய உணவகங்கள் மற்றும் சமையல் அனுபவங்களை ஆராய்வதற்காக குறிப்பாக ஓய்வுப் பயணங்களைத் திட்டமிடுவது தெரியவந்துள்ளது. புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் பகுதிகள் அல்லது நாடுகளுக்கு சென்று புத்தாண்டடை சுவையாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். ஏனென்றால் பல சுற்றுலா பயணிகள் புத்தாண்டில் தங்கள் பயண வரவுசெலவுத் திட்டங்களில் இரண்டாவது மிக உயர்ந்த ஒன்றாக உணவு சார்ந்த அனுபவங்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே புகழ்பெற்ற உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ் (TasteAtlas), சமீபத்தில் தனது 2024/25 ஆண்டிற்கான உலக உணவு விருதுகளை வெளியிட்டது, இது உணவு மதிப்பீடுகளின் அடிப்படையில் 100 நகரங்களின் தரவரிசை பட்டியலை கொண்டுள்ளது. 2024-25-ல் உலகின் 10 சிறந்த உணவு நகரங்கள் (food cities): குறிப்பிடத்தக்க வகையில உலகளாவிய சிறந்த உணவு நகரங்களின் தரவரிசை பட்டியலில் ஐரோப்பிய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன, டாப் 10 இடங்களில் 8 இடங்கள் ஐரோப்பிய நகரங்கள் ஆகும். அதே போல இந்த 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் இத்தாலி நாடு 6 இடங்களை பிடித்து சமையல் காலையில் அதன் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த பட்டியலின் டாப் 10 இடங்களில் ஆசியாவை சேர்ந்த 2 நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு முக்கிய நகரமும் அடக்கம். மற்றொன்று ஜப்பானில் உள்ள ஒசாகா நகரம் ஆகும். டேஸ்ட் அட்லஸ் சேகரித்த 477,000-க்கும் மேற்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நகரங்களின் சமையல் செழுமையையும் அவற்றின் பிராந்திய மற்றும் தேசிய உணவுகளின் சராசரி மதிப்பீடுகளையும் இந்த தரவரிசை பட்டியல் பிரதிபலிக்கிறது. உலகின் சிறந்த டாப் 10 உணவு நகரங்கள் 2024-25 பட்டியல் கீழே… 1. பீட்சா மார்கெரிட்டா (ரேட்டிங் - 4.8) - நேபிள்ஸ் நகரம் - இத்தாலி நாடு 2. Risotto alla Milanese (ரேட்டிங் - 4.7) - மிலன் நகரம் - இத்தாலி நாடு 3. டாக்லியாடெல்லே அல் ரகு (Tagliatelle al Ragù) (ரேட்டிங் - 4.6) - போலோக்னா நகரம் - இத்தாலி நாடு 4. Bistecca alla Fiorentina (ரேட்டிங் - 4.6) - ஃபியோரென்ஸ் நகரம் - இத்தாலி நாடு 5. வடாபாவ் (ரேட்டிங் - 4.5) - மும்பை நகரம் - இந்தியா 6. Spaghetti alla Carbonara (ரேட்டிங் - 4.5) - ரோம் நகரம் - இத்தாலி நாடு 7. கிரீம் ப்ரூலி (ரேட்டிங் - 4.4) - பாரிஸ் நகரம் - ஃபிரான்ஸ் 8. Zwiebelrostbraten (ரேட்டிங் - 4.4) - வியன்னா நகரம் - ஆஸ்திரியா நாடு 9. அக்னோலோட்டி (ரேட்டிங் - 4.3) - டுரின் நகரம் - இத்தாலி நாடு 10. டகோயாகி (ரேட்டிங் - 4.3) - ஒசாகா நகரம் - ஜப்பான் நாடு அதே போல உணவு மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள 100 நகரங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் மும்பையை தவிர 5 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. - 43-ஆவது இடத்தில் அமிர்தசரஸ் நகரம் உள்ளது. இந்நகரின் அமிர்தசாரி குல்ச்சா என்ற டிஷ் 4.2 ரேட்டிங்கை பெற்றுள்ளது. - 45-ஆம் இடத்தில் புதுடெல்லி உள்ளது. இந்நகரின் பட்டர் சிக்கன் (Murgh Makhani) டிஷ் 4.2 ரேட்டிங்கை பெற்றுள்ளது. - 50-ஆவது இடத்தில் ஹைதராபாத் உள்ளது. இந்த நகரின் புகழ்பெற்ற ஹைதராபாத் பிரியாணி 4.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது. - 71-ஆம் இடத்தில் கொல்கத்தா நகரம் உள்ளது. இந்த நகரின் புகழ்பெற்ற இனிப்பான ரசகுல்லா 4.0 ரேட்டிங்கை பெற்றுள்ளது. - பட்டியலில் 75-ஆம் இடத்தில் நம்முடைய சென்னை உள்ளது. நம் தமிழ்நாட்டில் அதிகம் சாப்பிடப்படும் உணவான தோசை 3.9 ரேட்டிங்கை பெற்றுள்ளது. நகர தரவரிசை பட்டியலை தவிர இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, பஞ்சாப் உலகின் 7-வது சிறந்த உணவுப் பிரதேசமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.