TREND

Galaxy S23 Ultra | இந்த சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ள நிறுவனம்

இந்தியாவில் பண்டிகை சீசன் துவங்கி உள்ளதை முன்னிட்டு, பல்வேறு கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது சாம்சங் நிறுவனம். தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி எஸ், எம் மற்றும் எஃப் சீரிஸ் மொபைல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான சலுகைகள், பிரபலமான சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்களை குறைந்த விலையில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங், தனது S23 Ultra மற்றும் S23 FE போன்ற ஸ்மார்ட் ஃபோன்களை ரூ.40,000 வரையிலான தள்ளுபடி விலையில் வழங்குகிறது, இதில் வங்கி சலுகைகளும் அடங்கும். இந்த சிறப்பு தள்ளுபடியானது லிமிட்டட்-பீரியட் ஃபெஸ்டிவ் ஆஃபர் ஆகும். கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சாம்சங் நிறுவனம் அளிக்கும் சலுகை விவரங்கள்: - சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 FE மொபைல் முதலில் ரூ.54,999 என்ற விலையில் இருந்தது, தற்போது இது 50% தள்ளுபடியுடன் ரூ.27,999 என்ற விலையில் கிடைக்கிறது. - ரூ.74,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்23 தற்போது ரூ.37,999 என்ற விலையில் கிடைக்கும், இது இந்த மொபைலின் அசல் விலையில் பாதியாகும். - வழக்கமாக ரூ.1,09,999 என்ற விலையில் விற்கப்படும் பிரீமியம் ஸ்மார்ட் ஃபோனான Galaxy S23 Ultra-வை இந்த பண்டிகை சீசனில் ரூ.69,999 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். நிறுவனத்தின் S23 Ultra 2 ஆண்டுகள் பழைய மாடலாக இருந்தாலும், நீண்ட ஆண்டு OS சப்போர்ட் வழங்குவதாக அளிக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் வாக்குறுதி இதனை சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான டிவைஸ்களில் ஒன்றாக வைத்திருக்கிறது. இந்த டிவைஸ் பிரீமியம் குவாலிட்டி இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய உதவும் 200MP பிரைமரி ரியர் கேமராவை கொண்டுள்ளது. - இந்த மொபைலை இன்னும் அப்கிரேடாக நீங்கள் பெற விரும்பினால், லேட்டஸ்ட் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவை நீங்கள் ரூ.1,09,999 என்ற விலையில் வாங்கிக் கொள்ளலாம். - அதே போல் கேலக்ஸி எஸ்24+ மொபைலின் விலை ரூ.99,999-ஆக உள்ள நிலையில், இதனை தற்போது ரூ.64,999 என்ற விலையில் வாங்கலாம். மேலும் Galaxy S24 மொபைல் இந்த பண்டிகை சீசனில் ரூ.59,999-க்கு வாங்கலாம். - சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் கேலக்ஸி எம்35 5ஜி மொபைல் ரூ.13,999 என்ற விலையில் கிடைக்கும். இதனிடையே சாம்சங் நிறுவனம் Galaxy S23 FE, S23, S23 Ultra, S24+ மற்றும் M35 5G ஆகியவற்றுக்கு அறிவித்துள்ள சிறப்பு சலுகை விலைகள் செப்டம்பர் 26 -ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.