தமிழ்நாட்டின் காலண்டர் தேவையில் பெரும்பான்மை சிவகாசியில் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், காலண்டர் தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் காலண்டரில் புதிய புதிய மாடல் காலண்டர்களை அறிமுகம் செய்து வருகின்றனர். கோல்டு பாயில் காலண்டர், ஸ்டோன் காலண்டர் போன்ற போன்ற புதிய ரக காலண்டர்களுக்கு மத்தியில் இந்த 234 QR காலண்டருக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையும் படிங்க: DHS Recruitment: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை... ரூ.60,000 வரை சம்பளம்... டிச.31 தான் லாஸ்ட்... QR காலண்டர்: இன்றைய நவீன உலகை கலக்கி வரும் டிஜிட்டல் யுக கான்செப்டை பின்பற்றி ஒவ்வொரு தேதியிலும் QR பார் கோடு அச்சிடப்பட்ட QR காலண்டர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பார் கோடை ஸ்கேன் செய்யும் போது அன்றைய நாளின் முக்கிய தகவல்கள் பற்றிய வீடியோ ப்ளே ஆகும் வகையில் தயார் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் அடுத்தபடியாக 234 QR காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன 234 காலண்டர்? முன்பு ஸ்கேன் செய்தால் அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் வீடியோவாக ப்ளே ஆகும் வகையில் தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது பார் கோடை ஸ்கேன் செய்தால் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய வீடியோ வரும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதையும் படிங்க: Healthy Vegetable: மட்டன், மீன் எல்லாம் இது முன்ன ஜுஜுபி... உலகின் சக்தி வாய்ந்த காய்கறி பற்றி தெரியுமா... இது பற்றி பேசிய சிவகாசி கற்பகா காலண்டர்ஸ் உரிமையாளர் மகரிஷ் குமார், “QR காலண்டருக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், அடுத்தகட்டமாக நாள் ஒன்றுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி வீதம் 234 சட்டமன்ற தொகுதி பற்றிய பார் கோடு கொண்ட காலண்டர் அறிமுகம் செய்துள்ளோம். மொத்தம் 365 நாட்கள் உள்ள நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 234 நாட்கள் போக மீதி நாட்களுக்கு முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளின் இதர விபரங்களைக் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:

ரயிலின் மேல் ஸ்டண்ட் செய்த இன்ஸ்டா பிரபலம்.. லைக்ஸ்க்காக எடுத்த விபரீத முடிவு!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 18, 2024
-
- December 18, 2024
-
- December 18, 2024
Featured News
உயிரிழந்த பின்னரும் ரூ. 5000 கோடி சம்பாதிக்கும் விஐபி… அவர் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 15, 2024
நாளை பூமியை மிகவும் நெருங்கும் 2 பெரிய விண்கற்கள்… பாதிப்பை ஏற்படுத்துமா?
- By Sarkai Info
- December 15, 2024
Latest From This Week
QR கோட் மூலம் நடக்கும் மோசடியை காட்டும் வீடியோ! இது விழிப்புணர்வா?
TREND
- by Sarkai Info
- December 13, 2024
இரு தலையுடன் இருக்கும் உயிரினம்; இது என்ன விலங்கு தெரியுமா?
TREND
- by Sarkai Info
- December 13, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
இனி ஆதார் மோசடி பற்றி கவலையே இல்ல... இருக்கவே இருக்கு மாஸ்க்டு ஆதார்!!!
- December 12, 2024