TREND

பூமியின் மேலடுக்குக்குள் 700 கி.மீ. ஆழத்தில் மறைந்திருக்கும் கடல்... விஞ்ஞானிகளின் ஆச்சர்ய கண்டுபிடிப்பு!

வெவ்வேறு ஆழங்களில் நில அதிர்வு அலைகளின் வேகத்தை அளப்பதன் மூலம், பூமியின் மேற்பகுதிக்கும் உள் மையப்பகுதிக்கும் இடையே தண்ணீர் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, பூமியின் பெருங்கடல்கள் மேற்பரப்பில் மட்டுமே இருப்பதாக மனிதர்கள் தற்போது வரை நம்பி வந்தனர். இந்நிலையில், பூமிக்கு அடியில் 700 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமியின் மேலடுக்குக்குள் கடல் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு எனக் கூறப்படும் நிலையில், ஒரு கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது. அது என்னவென்றால், பூமியின் மேற்பரப்பில் உள்ள கடல்கள் அனைத்தையும் விட மூன்று மடங்கு பெரிய இந்த நீர்த்தேக்கம், கிரகத்தின் நீர் சுழற்சியைப் பற்றிய நமது புரிதலை மறுவரையறை செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இந்த பெரிய கடல் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று இல்லை. அந்த கடலில் அலைகள், மீன்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. மாறாக, இந்த ‘கடல்’ ரிங்வுடைட் எனப்படும் அரிய நீலப் பாறையின் படிக அமைப்பில் சிக்கியுள்ளது. பூமியின் மேலடுக்கில் காணப்படும் இந்தப் பாறை, திரவ வடிவில் அல்லாமல், ஒரு படிக பூட்டில் பரந்த அளவிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் திகைப்பூட்டும் நிலையில், பூமியின் நீர் நம் கால்களுக்கு அடியில் மறைந்திருக்கிறதா? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. வடமேற்கு பல்கலைக்கழகத்தை (Northwestern University) சேர்ந்த ஸ்டீவன் ஜேக்கப்சன் தலைமையிலான ஆய்வுக் குழு, இந்த மர்மத்தைக் கண்டறிய புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளது. 500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகளைக் கண்காணிக்க அமெரிக்கா முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட நில அதிர்வு வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், நீர் நிறைந்த பாறைகள் இருப்பதால், சில ஆழங்களில் அலைகள் கணிசமாகக் குறைவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். வெவ்வேறு ஆழங்களில் நில அதிர்வு அலைகளின் வேகத்தை அளப்பதன் மூலம், பூமியின் மேற்பகுதிக்கும் உள் மையப்பகுதிக்கும் இடையே தண்ணீர் சிக்கியிருப்பதை அந்த குழு கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு பூமியின் நீரின் தோற்றம் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. தற்போது வரை, நடைமுறையில் உள்ள கோட்பாடு வால்மீன் தாக்கங்கள் வழியாக நீர் வந்தது என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மில்லியன் கணக்கான ஆண்டுகளில் பூமியின் உட்புறத்தில் இருந்து தண்ணீர் வெளியேறியிருக்கலாம் என்று கூறுகிறது. Also Read: Small Savings Schemes: செல்வ மகள் சேமிப்பு திட்டம், அஞ்சல் அலுவலக திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகிறதா..? - மத்திய அரசின் முடிவு என்ன? இந்த மறைக்கப்பட்ட நீர்த்தேக்கம், பூமியின் மேற்பரப்பு பெருங்கடல்களின் நீண்ட கால நிலைத்தன்மையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம். பூமியின் உட்புறத்திற்கும் அதன் மேற்பரப்புக்கும் இடையில் நீர் சூழற்சிக்கு இந்த நிலத்தடி கடல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து உள்ளனர். இதேபோன்று மற்ற பகுதிகளில் உள்ளதா என்பதைக் கண்டறிய, உலகளாவிய ஆய்வுகள் மூலம் மேலும் ஆராய்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.