TREND

தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெங்களூரு பெண் - எப்படி தெரியுமா?

பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டாளரான சாய்ஸ்வரி பாட்டீல், வேக்ஃபிட்டின் (_Wakefit )_தனித்துவமான தூக்கப் பயிற்சிப் போட்டியின் மூன்றாவது பதிப்பில் ‘ஸ்லீப் சாம்பியன்’ பட்டத்தை வென்றதன் மூலம் தூக்கத்தின் மீதான தனது காதலை லாபகரமாக மாற்றியுள்ளார். அங்கு அவர் ரூ. 9 லட்சத்தைப் பெற்றார். இந்த தனித்துவமான திட்டம், இரவில் 8 முதல் 9 மணி நேரம் தூங்கவும், பகலில் 20 நிமிட தூக்கத்தையும் பெற முயற்சிக்கும் மக்களை தூக்கத்தில் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறது. 12 ‘ஸ்லீப் இன்டர்ன்’களில் பாட்டீலும் ஒருவர், அவர்கள் தூக்கத்தை கண்காணிக்க பிரீமியம் மெத்தை மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனத்தைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, ​​பங்கேற்பாளர்கள் தங்களது இரவு தூக்கத்தை மேம்படுத்தவும், வெற்றியாளர் ஆவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் தூக்க நிபுணர்களால் நடத்தப்பட்ட ஒர்க்‌ஷாப்களையும் பார்த்தனர். மூன்று ஆண்டுகளை கொண்ட இந்த நிகழ்வில், வேக்ஃபிட்டுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 51 பயிற்சியாளர்களை மட்டுமே வேக்ஃபிட் நிறுவனம் இந்த பணிக்கு அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் ரூ.63 லட்சம் வரை அவர்களுக்கு உதவித்தொகையாகவும் செலுத்தி இருக்கிறது. வேக்ஃபிட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி குணால் துபே இதுபற்றி கூறுகையில், இந்தத் திட்டம் இந்தியர்களுக்கு தூக்கத்தின் மதிப்பை வேடிக்கையாக நினைவூட்டும் வகையில் இருக்கும. வேக்ஃபிட்டின் கிரேட் இந்தியன் ஸ்லீப் ஸ்கோர்கார்டு 2024 இன் படி, 48% இந்தியர்கள் சோர்வாக எழுந்திருக்கிறார்கள். நீண்ட வேலை நேரம், மோசமான தூக்க சூழல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் இதுபோன்ற பிரச்சனை நிகழ்கிறது. இதையும் படிக்க: இந்தியாவின் டாப் 5 பணக்கார மாநிலங்கள் இவைதான்.. தமிழ்நாடு இந்த லிஸ்ட்ல இருக்கா? மேலும் சாய்ஸ்வரி பாட்டீல், எழுதல் மற்றும் படுக்கைக்குச் செல்வது சம்பந்தமாக அட்டவணைகளை கடைப்பிடிப்பது ஒரு சிறந்த தூக்கத்திற்கான ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார். “நீங்கள் நல்ல மதிப்பெண் பெற விரும்பினால், திரைப்படங்களைப் பார்ப்பது உள்ளிட்ட இரவு நேரங்களில் செய்யக்கூடிய சில செயல்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். கோவிட் பெருந்தோற்று தனது தினசரி அட்டவணையை எவ்வாறு பாதித்தது மற்றும் அவரது வேலை அட்டவணை அவரது தூக்க முறைகளை எவ்வாறு பாதித்தது என்பது பற்றியும் அவர் விளக்கினார். எனினும், இந்த போட்டி அழுத்தம் கொடுத்த போதிலும், பாட்டீல் தனது அனுபவத்தால் பயனடைந்திருக்கிறார். “உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மனித உடலுக்கு எவ்வாறு ஆழ்ந்த மற்றும் விரைவான கண் அசைவு (REM) தூக்கம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்,” என்றும் அவர் கூறினார். அவரது இந்த முயற்சி நல்ல தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், சிறந்த தூக்க பழக்கத்திற்காக போராடுவதற்கான அவரது ஆர்வத்திற்கும் வழி வகுத்தது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.