TREND

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வந்த பாம்பு.. பீதியான பயணிகள்.. வைரல் வீடியோ!

மழைக்காலத்தில் நம் வீடுகளை சுற்றி அல்லது நாம் வசிக்கும் பகுதிகளில் பாம்புகளைப் பார்ப்பது பொதுவானது. சில நேரங்களில் வீட்டில் அடுக்கி வைத்திருக்கும் செருப்புகள் அல்லது ஷூக்களுக்குள் பாம்பு நுழைந்து சுருண்டு மறைந்திருப்பதை நமக்கு வெளிப்படுத்தும் பல வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு பாம்பு இருப்பதை அங்கு நீங்கள் கண்டால் எப்படி உணர்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். சமீபத்தில் ஜபல்பூர்-மும்பை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச் ஒன்றில் பயணம் செய்தவர்களுக்கு இது போன்ற அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று கிடைத்தது. குறிப்பிட்ட ரயிலின் ஏசி கோச் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அந்த பெட்டியில் பயணித்த பயணிகளை பீதியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலான வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இருந்த குறிப்பிட்ட கோச்சில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவில், இருக்கைகளுக்கு இடையே உள்ள இரும்பு கைப்பிடியில் சுற்றிய நிலையில் இருக்கும் பாம்பு அந்த கோச்சின் ஏசி டக்ட்-டை அடைய முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது. தகவலின்படி ஜபல்பூர்-மும்பை கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது கசரா ரயில் நிலையத்தை நெருங்கியபோது G3 கோச்சின் அப்பர் பெர்த்தில் ஒரு பாம்பு காணப்பட்டது. குறிப்பிட்ட அப்பர்-பெர்த்தில் இருந்த பயணி பாம்பை கண்டவுடன் பீதியடைந்து அலறினார். இதை தொடர்ந்து அந்த ஏசி கோச்சுக்குள் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனிடையே கடும் பீதிக்கு மத்தியிலும் அங்கிருந்த பயணிகளில் ஒருவர் ரயிலுக்குள் பாம்பு இருக்கும் வீடியோவை ரெக்கார்ட் செய்தார். அந்த வீடியோ கீழே… A snake was found on a Mumbai-bound Garibrath near Kasara station. Upon receiving information, administration immediately vacated the coach and detached it from the train. Necessary steps were taken to address the situation. pic.twitter.com/ZRfusWAeTh குறிப்பிட்ட கோச்சில் பாம்பு இருந்ததையடுத்து, அதிலிருந்த பயணிகள் வேறு கோச்சிற்கு மாற்றப்பட்டு, பாம்பு இருந்த அந்த கோச் லாக் செய்யப்பட்டு ரயிலில் இருந்து தனியே பிரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி நெட்டிசன்களின் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதையும் படிக்க: உங்க பெயரின் முதல் எழுத்தை வைத்தே குணத்தை கூறலாம்… நீங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா…? இந்த சம்பவம் குறித்து பேசிய மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா, பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது என்றும், ரயில்வே இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எனவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். பாம்பு எப்படி ரயிலுக்குள் நுழைந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் எலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அது இரை தேடி வந்திருக்கலாம் என சில நெட்டிசன்கள் கமென்ட் செய்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.