TREND

Flipkart's Big Billion Days Sale | அதிரடி விலை குறைப்பு - ஆப்பிள் மேக்புக் வாங்க இதுவே சரியான நேரம்!

ஆன்லைன் விற்பனையின் போது ஆப்பிளின் மேக்புக் ஏர் மாடல்களுக்கு அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 27 முதல் தொடங்குகிறது. இதில் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 ரூ.70,000க்கு குறைவாக கிடைக்கும் என்று ஈ-காமர்ஸ் தளம் சூசகமாக தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் வெளியிடப்பட்ட தகவலின் படி, அடுத்த பிளிப்கார்ட் விற்பனையின் போது 256GB ஸ்டோரோஜ் கொண்ட மேக்புக் ஏர் எம்2 விலை ரூ.64,999 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ஏர் எம்2 ஆன்லைன் டீல் விலை: இது எப்படி சாத்தியம்? ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ஏர் எம்2-வை சந்தையில் அறிமுகப்படுத்திய போது அதன் விலை 1 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தது, ஆனால் இப்போது நீங்கள் அதை சுமார் 99,900 ரூபாய்க்கு பெறலாம். ஆனால் பிளிப்கார்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியின் கார்டை பயன்படுத்தி, இறுதி விலையில் மேலும் ரூ.29,900 தள்ளுபடி பெறலாம். பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்கள் ஒரு நாள் முன்னதாகவே இந்த சலுகையைப் பெறுவார்கள். 8ஜிபி ரேம் மற்றும் எம்2 பிராஸசர் மூலம் இயங்கும் ஏர் மாடலைக் கொண்டிருப்பதால், நீங்கள் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களைப் பெறுவதுடன், ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால ஆதரவையும் பெற முடியும். மேக்புக் ஏர் எம்2 - முக்கிய அம்சங்கள்: மேக்புக் ஏர் எம்2 நேர்த்தியான மற்றும் மெல்லிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது டிரிம் செய்யப்பட்ட பெசல்களுடன் பிரகாசமான மற்றும் பெரிய திரையைக் கொண்டுள்ளது. இது ஆப்பிளின் சக்திவாய்ந்த எம்2 CPU உடன் பொருத்தப்பட்டுள்ளது, இதே அம்சம் தான் 13-இன்ச் மேக்புக் ப்ரோ 2022 ஹை-என்ட் மாடலையும் இயக்குகிறது. எம்2 பிராஸசருடன் கூடிய மேக்புக் ஏர், 8-கோர் GPU மற்றும் 8-கோர் CPU சிப்செட் உடன் வருகிறது. மேலும் இதில் 8 ஜிபி யுனிஃபைடு மெமரி மற்றும் 256 ஜிபி SSD ஸ்டோரேஜ் அம்சங்களும் அடங்கியுள்ளது. இது எம்13-இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் மிக சமீபத்திய Sequoia macOS-ஐ கொண்டிருக்கிறது. மேலும் இந்த லேப்டாப் 18 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் மேக்புக் ஏர் எம்2-வில் 1080p கேமரா இருப்பதால், இது உயர்தர கேமரா அனுபவத்தை உறுதி செய்கிறது. 2022 மாடலில் ஸ்பீக்கர் கிரில்ஸ் எதுவும் இல்லை, ஆனால், தற்போது ஆப்பிள் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃபர்களை கீபோர்டு மற்றும் டிஸ்ப்ளேக்கு இடையே வசதியாக அமைத்திருக்கிறது. மேலும் இதில் இடம்பெற்றிருக்கும் ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டால்பி அட்மாஸ் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.