TREND

காலிங் பெல் அடித்த டீனேஜ் பெண்.. கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பெங்களூருவில் புதிய மோசடி

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், பிரபல சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மாக இருக்கும் ரெடிட்டில் (Reddit) தான் எதிர்கொண்ட ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஷேர் செய்துள்ளார். அவரது இந்த அனுபவம் பெங்களூருவில் நடக்கும் புதிய மோசடியா என்ற சந்தேகத்தை பலரிடையே ஏற்படுத்தி உள்ளது. “Kvak95” என்ற பெயரில் Reddit-ல் இருக்கும் யூஸர் வார இறுதியில் வீட்டில் தான் ஓய்வெடுத்து கொண்டிருக்கும்போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பதிவிட்டுள்ளார். சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு அரை தூக்கத்தில் டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்டு தூக்கத்தை தொலைத்துள்ளார். ஒருமுறை, இருமுறை அல்லாமல் பலமுறை காலிங் பெல் அடிக்கப்பட்டதால் சற்றே எரிச்சலுடன் எழுந்து கதவை திறக்கச் சென்றுள்ளார். கதவை திறந்து பார்த்தபோது ​​​சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீட்டு வாசலில் நிற்பதை கண்டார். தன்னை பார்த்ததுமே அந்த பெண் கர்நாடக மாநில மொழியான கன்னடத்தில் பேச துவங்கி விட்டதாக Kvak95 குறிப்பிட்டுள்ளார். இந்த யூஸர் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்மணி பேசிய கன்னடம் ஓரளவிற்கு புரிந்தாலும், நல்ல தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுவதும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துள்ளார். ஆனால் அந்த பெண் பேசியதில் ஒரு வார்த்தை அவரது கவனத்தை ஈர்த்தது: அதாவது திருமணம் என்ற பொருள்படும்படியான வார்த்தையை கன்னடத்தில் பேசியுள்ளார் அந்த பெண், அதுவும் தனக்கு அருகில் நின்ற இளம்பெண் ஒருவரை காட்டி… ஆனால் அந்த இளம் பெண்ணை பார்த்தால் 15 வயது கூட நிரம்பாத சிறுமியை போல் இருந்ததாக யூஸர் Kvak95 குறிப்பிட்டுள்ளார். உடனே சற்று அதிர்ச்சியடைந்த அவர் கல்யாணமா! என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் தெலுங்கு அல்லது இந்தி பேசுவீர்களா என்று Kvak95-ஐ கேட்டுள்ளார். தான் தெலுங்கு பேசுவேன் என்று அந்த யூஸர் கூறியதை தொடர்ந்து, அருகில் உள்ள கோவிலில் தனது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், ஆனால் திருமணத்தை நடத்த முடியாத அளவு தங்கள் குடும்பத்திற்கு பணப் பற்றாக்குறை இருப்பதாகவும் அந்த பெண் யூஸரிடம் பரிதாபமாக குறிப்பிட்டுள்ளார். திருமணத்தை நடத்தி முடிக்க தங்களுக்கு அவசரமாக 15,000 ரூபாய் தேவைப்படுவதாகவும், எனவே தனது மகளின் திருமண வாழ்க்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உதவி கோரியுள்ளார். இதையும் படிக்க: குழந்தையுடன் ஆபத்தாக ரீல்ஸ் செய்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி… நெட்டிசன்கள் கொதிப்பு! ஆனால் தனக்கு வந்த பயங்கர தூக்கத்தை கலைத்துவிட்டாரே என்று எரிச்சல் ஏற்பட்டதால் பணமெல்லாம் ஒன்றும் இல்லை என்று சற்று கோபமாக கூறிவிட்டு கதவை மூடிவிட்டதாக யூஸர் Kvak95 குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஒருவேளை இது பெங்களூருவில் நடைபெறும் ஒரு புதிய வகை மோசடியாக இருக்குமோ என்ற தனது சந்தேகத்தை ரெடிட்டில் எழுப்பியுள்ளார். மகளின் திருமணத்திற்கு பணம் தேவை என்ற சாக்கில் பணம் கேட்கிறார்கள். என்னுடைய வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுமி மைனர் என்று தோன்றியதால், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டுமா என்றும் பிற யூஸர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையும் படிக்க: பராமரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த ராட்சத பாண்டா… பார்வையாளர்கள் ஷாக்… வைரல் வீடியோ! இதே போன்ற சூழ்நிலையை ஏற்கனவே எதிர்கொண்ட சில யூஸர்கள் இது ஒரு மோசடிதான் என்று உறுதிப்படுத்தினர். தாங்களும் பண உதவி ஏதும் செய்யாமல் கதவை மூட கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு யூஸர் தான் 2002-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு வயதான பெண் இதே போன்று திருமணம் என்று காரணம் கூறி தண்னிடம் பணம் கேட்டதாகவும், தனது பாக்கெட் மணியிலிருந்து அந்த பெண்ணுக்கு 2 ரூபாய் கொடுத்ததை பெருமையாக உணர்ந்ததாகவும், பின்னாளில் இது ஒரு மோசடி என்று உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். யூஸர் Kvak95-ன் போஸ்ட்டிற்கு கமெண்ட் செய்த பெரும்பாலான யூஸர்கள் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை என்றனர். ஒரு யூஸர் நிரூபிக்கப்படும் வரை அனைத்தும் மோசடி தான் என்று குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.