TREND

KFC அவுட்லெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வைரலாகும் ஷாக் வீடியோ!

சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு KFC அவுட்லெட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில் KFC ஊழியர்கள் உணவு விற்பனை நிலையத்தில் ஒரு வாடிக்கையாளருடன் சண்டையிடுகின்றனர். மக்கள் பெரும்பாலும் தங்கள் ஆர்டர்களை விரைவாகப் பெற ஆசைப்படுகிறார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், இந்த அவசரம் வன்முறையில் முடிந்ததை காட்டுகிறது. ஆம், இந்த வீடியோவில், KFC உணவகத்தின் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததைக் காணலாம். உணவு ஆர்டர் தொடர்பாக கடை ஊழியர்களுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரிதாகி, சண்டை வரை சென்றது. வாடிக்கையாளர் ஆக்ரோஷமாக ஊழியரை அடித்ததை பார்த்த, KFC இன் டேக்லைன் கொண்ட டி-ஷர்ட்களை அணிந்த ஊழியர்களில் சிலர், வாடிக்கையாளருடன் சண்டையிட்டனர். இருப்பினும், சில ஊழியர்கள் அவர்களை தடுக்க முயற்சிக்கின்றனர். அப்போது ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரை கவுண்டருக்கு மேல் தள்ளி பலமுறை அடிக்கிறார். இதையும் படிக்க: இந்திய ரூபாய் நோட்டுகளில் முதல் தேர்வாக மகாத்மா காந்தி இல்லை… என்ன நடந்தது தெரியுமா? ஒரு கட்டத்தில், ஒரு சில KFC ஊழியர்கள் அந்த நபரின் கழுத்தைப் பிடிக்க, மற்றொரு ஊழியர் அவரைத் தொடர்ந்து அடிக்கிறார், இதனால் அந்த வாடிக்கையாளருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது லைட் ப்ளூ ஷர்ட் அணிந்த நபர், சுற்றி இருந்த ஊழியர்களை ஒதுக்கிவிட்டு இரு தரப்பினரையும் பிரிக்க முயற்சிக்கிறார். இதனையடுத்து அந்த நபரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்ட ஊழியர், சில நிமிடங்களுக்குப் பிறகு விட்டார். இருப்பினும் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்வதோடு இந்த வீடியோ முடிவடைகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் உட்பட ஏராளமான மக்கள் இந்த சண்டையை வேடிக்கை பார்க்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் இந்த சண்டையை தங்கள் மொபைலில் வீடியோ எடுப்பதையும் காணலாம். வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் இல்லை. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியாது, ஆனால் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. Kalesh b/w KFC Staff and customer over Some order Related issues, Somewhere in Kerala pic.twitter.com/QueB0w3AQ9 “ஆர்டர் தொடர்பாக KFC ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வீடியோ கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து எடுக்கப்பட்டது” என்ற கேப்ஷனுடன் இந்த விடியோவானது Xஇல் பதிவிடப்பட்டது. இந்த விடியோ பதிவிடப்பட்டதை அடுத்து வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1.5 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோ குறித்து நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.