TREND

கால்பந்து விளையாட்டின்போது குழந்தை செய்த அதிர்ச்சி செயல்.. சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ!

டெக்சாஸ் கால்பந்து விளையாட்டின்போது மைதானத்தில் இருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தை பீர் குடிக்கும் வீடியோ வைரலாக பரவி, பெரும்பாலானோரின் கவனத்தையும், கவலையையும் ஈர்த்துள்ளது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த குழந்தையின் தாய், அவள் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். ஆஸ்டினில் உள்ள டாரெல் கே ராயல்-டெக்சாஸ் மெமோரியல் ஸ்டேடியத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, அங்கு சிறுமி மைக்கேலோப் அல்ட்ராவின் கேனில் இருக்கும் பீரை மூன்று முறை குடிப்பது பதிவாகியுள்ளது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், அந்த குழந்தையின் அருகில் அமர்ந்திருந்த அவளுடைய அம்மா, குழந்தையின் இந்த செயலில் தலையிடவோ அல்லது அவளைக் கண்டிக்கவோ செய்யாமல் அமைதியாக இருந்தார். மேலும், அந்த குழந்தையின் வலதுபுறத்தில், மற்றொரு சிறுவனான அவளுடைய மூத்த சகோதரர், நிலைமைக்கு முற்றிலும் மாறாக, தண்ணீரை உறிஞ்சுவதைக் காணலாம். தாய், அந்த குழந்தை பீர் குடிப்பதை பார்த்தாளா என்கிற குழப்பம் எழுந்திருக்கும் நிலையில், சமூக பொறுப்பு உள்ளவராக நீங்கள், வீடியோ எடுப்பதற்கு பதிலாக குழந்தையின் தாயிடம் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். NEW: Toddler caught throwing back a beer at the University of Texas football game over the weekend. The child, who appears to be about 4, was seen chugging a Michelob ULTRA. Her mother appeared to be completely oblivious to what was going on. According to the individual who… pic.twitter.com/HGAyhTe95Z இந்த வீடியோ முதலில் டிக்டாக் யூசர் ஒருவரால் வெளியிடப்பட்டது, அதன் பின்னர் பல எக்ஸ் யூசர்களும் அதை பகிர்ந்துள்ளனர். இந்த டிக்டாக் வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களையும், கருத்துக்களையும் கிளப்பியுள்ளது. உதாரணமாக, ஒரு பார்வையாளர், ”பரவாயில்லை, அது மைக்கேலோப் தான். அடிப்படையாக இதில் தண்ணீர் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் வைரலான இந்த வீடியோ, பெற்றோரின் மேற்பார்வை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளதால் சமூக ஊடக யூசர்கள் முற்றிலும் கோபமடைந்துள்ளனர். இதையும் படிக்க: Nail cutter : நகம் வெட்டியில் உள்ள இரண்டு சிறிய கத்திகள்… அதன் பயன்பாடு என்ன தெரியுமா..? “என்ன ஒரு மோசமான பெற்றோர்” என ஒரு யூசரும், ”தெளிவற்ற பெற்றோர்கள் இன்றைய சமுதாயத்தில் பலரும் இருக்கிறார்கள்” என்று மற்றொரு யூசரும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் பலர், வீடியோவைப் பதிவுசெய்த நபரை அவதூறாகப் பேசியுள்ளனர் மற்றும் வீடியோ எடுப்பதற்குப் பதிலாக பெற்றோரிடம் சம்பவத்தைப் பற்றி எடுத்து கூறியிருக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர். ”வீடியோ எடுப்பதற்குப் பதிலாக, அந்த நபர் ஏன் உடனடியாக பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை? அந்த குழந்தையை பார்ப்பதும், அந்த குழந்தை செய்வதைப் பார்த்து அதை வீடியோவாக பதிவு செய்வது மட்டும் சரியா? கவனிக்காத அந்த பெற்றோரை விட நீங்கள் மிக மோசமானவர்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.