TREND

பைக் ரேஸிற்கு அடிமையான மகன்.. தந்தை எடுத்த அதிரடி முடிவு! - மலேசியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்!

மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மகனின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மலேசியா கோலாலம்பூர் அருகே வசித்து வருபவர் ஷா ஆலம். இவர் தனது மகன் பைக் ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று இவர் தான் ஆசையாக மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் காலப்போக்கில், தனது மகன் மோட்டார் சைக்கிள் ரேஸிற்கு அடிமையாகி, அடிக்கடி பந்தயங்களில் கலந்துகொள்வதை அறிந்து அதிர்ந்து போனார். தனது உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் பந்தயத்தில் பங்கேற்று மாலையில் மிகவும் தாமதமாக வீடு திரும்புவதைக் கவனித்தார். இதையும் படிக்க: ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எவ்வளவு மைலேஜ் தரும் தெரியுமா… பலருக்கும் தெரியாத தகவல்! பைக் ரேஸ் செல்லாதே, ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என மகனுக்கு அறிவுரை கூற முயன்றாலும், அவரது மகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது மகனுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த அப்பாவி தந்தை, தன் மகன் விபத்தில் இறப்பதைக் காட்டிலும் ஆசையாக வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளை எரிப்பது தான் சரியானதாக இருக்கும் என்ற கடுமையான முடிவை எடுத்தார். தனது மகனை நிரந்தரமாக இழக்க விரும்பவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக தனது மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு அழைப்பையும் பெற விரும்பவில்லை என்றும் தந்தை கூறினார். தனக்கும் மகனுக்கும் இடையில் மோதலுக்கு முக்கிய காரணம் இந்த மோட்டார் சைக்கிள் தான் என்பதையும் தந்தை உறுதிப்படுத்தினார். அதை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் உணர்ந்தார். அதன்படி மகனின் பைக்கை அவர் எரித்தார். இதற்கிடையில் இதற்கு முற்றிலும் எதிரான மற்றொரு சம்பவம் மைக் ஜோன்ஸ் என்ற நபருக்கு நிகழ்ந்துள்ளது. இவர் ஒரு பந்தயத்தில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென்று நடுவழியில் தனது ரேஸ் காரை மோதிக் கொண்டார். மற்ற யாரேனும் உதவிக்கு வருவதற்கு முன் தன் தந்தை தன்னைக் காப்பாற்ற ஓடி வருவார் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது தந்தை டீன், விபத்தைப் பார்த்தவுடன், மார்ஷல்கள் எவரும் வருவதற்கு முன், சுவரைத் தாண்டி, தனது மகனின் எரியும் காரை நோக்கி ஓடினார். கார் முழுமையாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஆனால் தந்தை தனது மகனை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுத்து காரை விட்டு நகர்த்துவதில் மும்முரமாக இருந்து, அதில் வெற்றியும் பெற்றார். ஒரு சில வினாடிகளில், ஓடுபாதையில் எரிபொருள் கீழே கொட்டியதாலேயே இவ்வுளவு பெரிய விபத்து ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.