TREND

இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா? கம்மி ரேட்டிற்கு என்ன காரணம்?

உலக நாடுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் அன்றாடம் உணவைப் போன்று மது குடித்து வருகின்றனர். இதனால் ஏராளமான தீமைகள், உடல் நலத்திற்கு கெடுதி என்று பல பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மது பிரியர்கள் பொருட்படுத்துவதில்லை. மதுவுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு மது கிடைக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்தும் மது பிரியர்கள் புதுவை செல்சின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே புதுச்சேரியை விடவும் கோவாவில் மது பான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அங்கு ரூ. 100-க்கு விற்பனையாகும் மது பாட்டில் டெல்லியில் ரூ. 134 க்கும், கர்நாடகாவில் ரூ. 513-க்கும் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் படிக்க: விமானப் பணிப்பெண்ணின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகமாகும். பல்வேறு உள்ளூர் வரிகளின் விளைவாக, டெல்லி மற்றும் மும்பை இடையே பிரபலமான ஸ்காட்ச் பிராண்டுகளுக்கு 20%க்கும் அதிகமான விலை ஏற்றத்தாழ்வு உள்ளது. உதாரணமாக, டெல்லியில் சுமார் ரூ.3,100 விலையுள்ள பிளாக் லேபிளின் ஒரு பாட்டில், மும்பையில் தோராயமாக ரூ.4,000 ஆக உள்ளது. வரி வித்தியாசம் காரணமாக சட்ட விரோதமான முறையில் குறைவான வரி விதிக்கப்படும் பகுதிகளில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளைப் போலல்லாமல், மது மற்றும் பெட்ரோலியம் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வரம்புக்கு வெளியே உள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் பல வரிகள் மற்றும் வரி விகிதங்கள் மதுபாட்டில்களுக்கு உள்ளன. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மது பாட்டில் விலை மாறுபடுகிறது. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா? கம்மி ரேட்டிற்கு என்ன காரணம்? இந்தியாவிலேயே குறைந்த விலையில் மது விற்பனையாகும் இடம் எது தெரியுமா? கம்மி ரேட்டிற்கு என்ன காரணம்? இந்தியாவிலேயே மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படும் இடம் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 5, 2024, 9:59 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் உலக நாடுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் அன்றாடம் உணவைப் போன்று மது குடித்து வருகின்றனர். இதனால் ஏராளமான தீமைகள், உடல் நலத்திற்கு கெடுதி என்று பல பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மது பிரியர்கள் பொருட்படுத்துவதில்லை. மதுவுக்கு குறைந்த வரி விதிக்கப்படுவதால் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு மது கிடைக்கிறது. இதனால் வார இறுதி நாட்களில் புதுச்சேரி எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்தும் மது பிரியர்கள் புதுவை செல்சின்றனர். விளம்பரம் இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே புதுச்சேரியை விடவும் கோவாவில் மது பான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அங்கு ரூ. 100-க்கு விற்பனையாகும் மது பாட்டில் டெல்லியில் ரூ. 134 க்கும், கர்நாடகாவில் ரூ. 513-க்கும் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் படிக்க: விமானப் பணிப்பெண்ணின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகமாகும். பல்வேறு உள்ளூர் வரிகளின் விளைவாக, டெல்லி மற்றும் மும்பை இடையே பிரபலமான ஸ்காட்ச் பிராண்டுகளுக்கு 20%க்கும் அதிகமான விலை ஏற்றத்தாழ்வு உள்ளது. உதாரணமாக, டெல்லியில் சுமார் ரூ.3,100 விலையுள்ள பிளாக் லேபிளின் ஒரு பாட்டில், மும்பையில் தோராயமாக ரூ.4,000 ஆக உள்ளது. விளம்பரம் வரி வித்தியாசம் காரணமாக சட்ட விரோதமான முறையில் குறைவான வரி விதிக்கப்படும் பகுதிகளில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் பகுதிக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான 10 அறிகுறிகள்.! மேலும் செய்திகள்… பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளைப் போலல்லாமல், மது மற்றும் பெட்ரோலியம் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வரம்புக்கு வெளியே உள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் பல வரிகள் மற்றும் வரி விகிதங்கள் மதுபாட்டில்களுக்கு உள்ளன. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மது பாட்டில் விலை மாறுபடுகிறது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Alcohol , Indian Alcohol consumption , Latest News , Top News , Trending News First Published : October 5, 2024, 9:59 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.