TREND

1 BHK வீட்டு வாடகை மாதம் ரூ.45 ஆயிரமா..? அப்படி என்னதான் அங்க இருக்கு? - வைரலாகும் பதிவு!

இன்றைய காலக்கட்டத்தில் செலவுகள் அதிகரித்து வருவதால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பல இந்திய நகரங்களில் மலிவு விலையில் வாடகை வீடுகளைக் கண்டறிவது சவாலானதாக மாறியுள்ளது. மும்பை, பெங்களூர் மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் வேலைக்காக வரும் இளைஞர்களையும், குடும்பங்களையும், புதிய நிறுவனங்களையும் ஈர்க்கின்றன. இதனால் இங்கு வாடகை வீடுகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. “கனவுகளின் நகரம்” என்று அழைக்கப்படும் மும்பையில், வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக பட்ஜெட்டில் வாடகை வீடு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இங்கு சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலையும் அதிகரித்துள்ளதால், சிலருக்கு வாடகைக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மும்பையின் மாட்டுங்காவில் அமைந்துள்ள 1BHK அபார்ட்மெண்டின் விலை ரூ.45,000 ஆகும், இதில் சிங்கிள் பெட்ரூம், ஹால் மற்றும் கிச்சன் ஆகியவை அடங்கும். ஹாலில் இருந்து, ஒரு சிறிய படிக்கட்டு உள்ளது, இது மாடிக்கு செல்கிறது. அந்த இடத்தில் சிறிது இடம் உள்ளதால், குடியிருப்புவாசிகள் தங்களின் கூடுதல் பொருட்கள் அனைத்தும் அங்கே வைக்கின்றனர். இது குறித்து எக்ஸ் பயனாளர் ஒருவர், அபார்ட்மெண்டின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், “மாட்டுங்கா ஈஸ்ட், ஓல்ட் வைப் 1BHK வாடகை ரூ.45 ஆயிரம் மட்டுமே” என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ளது. purani chawl ko old school/old vibes bolkr 45k rent pr de rhe capitalism has commodified poverty to a next level 🤣🤣🤣 pic.twitter.com/aK5KjRu6OR இந்த பதிவு உடனடியாக வைரலானதை அடுத்து, பல நெட்டிசனைகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு யூசர் கூறியதாவது, இவ்வளவு சிறிய வீட்டிற்கு ரூ.45 ஆயிரம் வாடகையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு யூசர் கூறியதாவது, இது சில அரசு கல்லூரி விடுதிகளை விட மோசமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார். இன்னொரு யூசர் கூறியதாவது, மாத வாடகை ரூ.45,000 கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கூறியுள்ளார். மும்பையில் இது போன்ற சம்பவம் நடப்பது முதல் முறை அல்ல, இதற்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒருவர் மும்பையின் பாலி ஹில் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான 2BHK அடுக்குமாடி குடியிருப்பின் கண்களைக் கவரும் படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு குளியலறை இருந்தது, அங்கு ஒரு வாஷிங் மெஷினும் இருந்தது. இதன் விலை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மாத வாடகை ரூ.1.35 லட்சம் என அந்த நபர் பதிவில் தெரிவித்தார். இந்த பதிவு விரைவில் வைரலானதை அடுத்து சமூக வலைதளங்களில் விவாதத்தின் மையமாக மாறியது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.