TREND

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி! - வைரல் வீடியோ!

ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீசார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் ஏறுவது உயிருக்கு ஆபத்து என ரயில்வே ஊழியர்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும், பல்வேறு ரயில்வே பிளாட்பாரங்களில் ரயில்வே போலீஸார் தொடர்ந்து தங்கள் பணிகளைச் செய்து, பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயன்று பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே சமயம் இதுபோன்ற சம்பவங்களில் ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் குறித்து செய்திகளை அடிக்கடி பார்த்து வருகிறோம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் குஜராத்தில் தற்போது நடந்துள்ளது. குஜராத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், பயணியின் உயிரைக் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அல்பேஷ் சவுகான் என்ற இளைஞர் வாபியிலிருந்து பருச்சில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல, ​​ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நடைமேடையில் தவறி விழுந்தார். પોલીસ જવાને સમય સૂચકતા બતાવી વાપી રેલવે સ્ટેશને ચાલુ ટ્રેને ચઢવા જતા પડી ગયેલ મુસાફરનો જીવ બચાવી સરાહનીય કામગીરી કરી ! pic.twitter.com/4l95Nh4vX7 அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் யோகேஷ் ஜகுபாய் விரைவாக ஓடிச் சென்று பயணியின் உயிரைக் காப்பாற்றினார். நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அல்பேஷ் சவுகானை, கான்ஸ்டபிள் பாதுகாப்பாக மீட்டார். கான்ஸ்டபிளின் விரைவான செயல் மற்றும் விவேகம் ஆகியவை விபத்தை தடுத்து நிறுத்தியதோடு, பயணியின் உயிரை காப்பாற்றிது என்று காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அவசரகால சூழ்நிலைகள் ஏற்படும் போது விழிப்புணர்வும், தயார்நிலையும் ஏன் மிகவும் அவசியம் என்பதை இந்த காட்சி நிரூபிக்கிறது. காவலர் தனது கடமையைச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட குஜராத் காவல்துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், அல்பேஷ் மற்றும் யோகேஷ் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தையும் தனது X வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைராலனதை அடுத்து நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். கான்ஸ்டபிளின் துணிச்சலைப் பாராட்டினர், கருத்துகள் பிரிவில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். அதில் ஓரு யூசர் கூறியதாவது, போலீஸ் பாதுகாப்பு இல்லாத இடமே இல்லை. உங்களுக்கு சல்யூட் அண்ணா என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர் கூறியதாவது, எனக்கு ஒரே இதயம், அதில் குஜராத் காவல்துறை எத்தனை முறை வெல்லும்? என்று கூறியுள்ளார். குஜராத் காவல்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று மற்றொருவர் கூறியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.