TREND

தெருவோர உணவு கடை ஆரம்பித்து 'கோடீஸ்வரர்' ஆன நபர்... சாதித்தது எப்படி?

டெல்லியின் நேரு பிளேஸில் உள்ள சர்மா சாட் கடை, அதன் அருமையான சுவை காரணமாக் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இங்குதான் ஷர்மாஜி தஹி பல்லாவை விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். “கோடீஸ்வர சாட்வாலா” என்று அழைக்கப்படும் ஷர்மாஜி. சாட் வியாபாரத்தில் பெற்ற வெற்றியின் காரணமாக பலராலும் மதிக்கப்படும் நபராக இருக்கிறார். நவீன இந்தியாவில் உணவுத் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பருவகாலத்தை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் விருப்பம் போல், விருப்பப்பட்டதை விருப்பட்ட நேரத்தில் சாப்பிட்டு மகிழ்கின்றனர். அதனால் ஹோட்டல் ஆரம்பிப்பதும் ஒரு செழிப்பான வணிகமாக உள்ளது. இப்படி உணவு தொழில் மூலமாகவே பல தொழில்முனைவோர் கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள். ஷர்மாஜியின் சாட் கடை டெல்லியில் ஒரு நட்சத்திர பெயரைப் பெற்றுள்ளது. இவர் பல ஆண்டுகளாக நேரு பிளேஸில் தனது வணிகத்தை நடத்தி வருகிறார். இவரது உணவின் தனித்துவமான சுவையால் உணவுப் பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வெற்றி அவருக்கு “கோடீஸ்வர பல்லவாலா” என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இன்று அவர் கோடீஸ்வரர் ஆனதற்கு லட்சக்கணக்கில் விற்பனையான தஹி பல்லாவே காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. ஷர்மாஜி இப்போதெல்லாம் அடிக்கடி தனது கடைக்கு BMW காரில் வருவது அங்கு உள்ள வாடிக்கையாளர்களை கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷர்மாஜி, ஒரு கடையை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக, ஒரு சிறிய மேசையைப் பயன்படுத்தி அதில் ஸ்டாண்டை அமைத்து, பொருட்களை நேரடியாக தனது காரில் இருந்து விற்பனை செய்கிறார். சந்தையில் உள்ள கடைக்காரர்கள் இவரது புகழ்பெற்ற தஹி பல்லாவை ருசிக்காமல் வெளியேற மாட்டார்கள். ஷர்மாஜி தனது எளிமையான கடையில் உட்கார்ந்து கொண்டு சாட் பரிமாறுகிறார். அவர் வீட்டில் தஹி பல்லாவை தயார் செய்து அதனை இங்கு கொண்டுவந்து பரிமாறுகிறார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு தட்டு சாட்டிலும் தயிர் மற்றும் பனிக்கட்டி, அதோடு சேர்த்து அவரது பிரத்யேக மசாலா பொருட்களும் இருக்கும். இன்று இவரது உணவு அந்தப் பகுதியின் ஒரு அடையாளச் சின்னமாகவே மாறிவிட்டது. இதையும் படியுங்கள் : உங்க வயிற்றை சுத்தம் செய்யும் 3 பானங்கள்.. என்னென்ன தெரியுமா? - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! முகேஷ் குமார் ஷர்மா 1989-ம் ஆண்டு முதல் இந்த உணவு கடையை நடத்தி வருகிறார். அவரைப் பொறுத்தவரை, அவரது வெற்றியின் ரகசியம் அவரது கையால் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களில் உள்ளது. இதுதான் அவரது தஹி பல்லாவின் சுவையை வரையறுக்கிறது. கடை ஆரம்பித்த புதிதில் தஹி பல்லா ஒரு பிளேட்டின் விலை வெறும் ரூ.2 மட்டுமே. ஆனால் இன்று அதன் விலை ரூ.40. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.