TREND

குழந்தையுடன் ஆபத்தாக ரீல்ஸ் செய்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி... நெட்டிசன்கள் கொதிப்பு!

தற்போதைய காலத்தில் சோஷியல் மீடியாவின் பெருக்கத்தால் பலரும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில், மற்றவர்களை விட வித்தியாசமான முறையில் வீடியோ பதிவிட வேண்டும் என நினைக்கின்றனர். அப்படித்தான் ஒரு பெண் ரீல்ஸ் மோகத்தில், ஆழமான கிணற்றின் அருகே பொறுப்பற்ற முறையில் குழந்தையின் உயிரை பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் வீடியோ ஒன்றை படம்பிடித்து, இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதில் உள்ள அபாயங்களைப் பற்றி கவலைப்படாமல், அந்தப் பெண் பாடலுக்கு ரீல்ஸ் செய்தபடியே பின்னால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி மறந்துவிட்டாள். இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பிரபல சமூக ஊடகமான X தளத்தில் ‘Raw and Real Man’ என்ற பெயர் கொண்ட பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், ​​​​பலரது கண்டனத்தைப் பெற்றுள்ளது. அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயல்களுக்கு சமூக ஊடக பயனர்களிடமிருந்து பரவலான கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளன. Family court in custody case: Only mother can love child more. Even more than father. Le mother: #ParentalAlienation pic.twitter.com/mc1kl5ziFj வெறும் 22 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், கிணற்றின் விளிம்பில் அந்தப் பெண் ஆபத்தான நிலையில் அமர்ந்திருந்தபடி, ஒரு கால் கிணற்றின் உள்ளேயும் இருக்க, கையில் சிறு குழந்தையை பிடித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கை தவறினால் கூட அந்தக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்தப் பெண், அலட்சியமாக பாடலுக்கு உதட்டை அசைத்தபடி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கில், சமூக ஊடகங்களில் வீடியோ போடுபவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இணையத்தில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்கான இப்படியெல்லாமா ஆபத்தான விஷயங்களை செய்வார்கள் என பலர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர். இதையும் படிக்க: கால்பந்து விளையாட்டின்போது குழந்தை செய்த அதிர்ச்சி செயல்.. சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ! “என்ன குப்பை இது? இந்த முட்டாள்தனமான வீடியோவுக்காக அவள் தன்னுடைய உயிரையும், குழந்தையின் உயிரையும் பணயம் வைக்கிறாள்” என்று ஒரு பயனர் கருத்து கூறியுள்ளார். “பிரபலமாவதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். குழந்தையின் உயிரைப் பற்றி கூட அவர்களுக்கு கவலையில்லை. சுத்த முட்டாள்தனமானது” என இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற மோசமான ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதற்காக அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டும் என்று பல பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “அவள் கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும். இவள் கொடூரமானவள்” என்று மற்றொரு பயனர் கூறியுள்ளார். இதையும் படிக்க: எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென வந்த பாம்பு.. பீதியான பயணிகள்.. வைரல் வீடியோ! “இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக உள்ளது” என்று கூறிய பலர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கமென்ட் செக்ஷனில் அதிகாரிகளை டேக் செய்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.