TREND

1200 கிமீ தூரம்.. டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு சைக்கிளில் பயணம்.. தோனியை பார்க்க வந்த இளைஞர்!

ஒருவர் மீது நமக்கு அளவுகடந்த அன்பு இருந்தால், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் கட்டுக்கடங்காமல் இருந்தால், அந்தக் கனவை நீங்கள் அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், அவரை சந்திக்க டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு சைக்கிளில் பயணம் செய்து இதை நிரூபித்துள்ளார். கௌரவ் குமார் என்ற இந்த நபர், “கேப்டன் கூல்” தோனியின் சின்னச் சின்னப் படங்கள் ஒட்டப்பட்ட மஞ்சள் நிற சைக்கிளில் 1,200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். அதன்பின்னர் தோனியின் பண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு வாரம் முகாமிட்டு தங்கியிருந்தார் கௌரவ். தோனியின் சகோதரர் அவரை வீட்டு வாசலுக்கு வெளியே பார்த்து, பண்ணை வீட்டிற்கு வருமாறு அழைத்ததும் ஒருவழியாக அவரது காத்திருப்பு முடிவுக்கு வந்தது. தோனியை சந்தித்து தனது கனவை நிறைவேற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அவருக்கு அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, அவருக்கு தனது கையெழுத்திட்ட ஐபிஎல் ஜெர்சியை பரிசாக வழங்கினார். ஒரு சமூக ஊடக பயனர் X தளத்தில் இதன் புகைப்படங்களைப் பகிர்ந்த பிறகு கௌரவின் கதை வெளிச்சத்திற்கு வந்தது. முதல் படத்தில், ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு வெளியே சிஎஸ்கே சட்டை அணிந்தபடி கௌரவ் நிற்பதைக் காணலாம். இரண்டாவது ஃபிரேமில், தோனியின் ஆட்டோகிராஃப் அடங்கிய புத்தம் புதிய சிஎஸ்கே ஜெர்சியை பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக கௌரவ் நிற்கிறார். இந்தப் புகைப்படத்தோடு சேர்த்து “ஒருவழியாக மஹியை சந்தித்துவிட்டேன்” என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. आपने ये तस्वीर देखी होगी, इसे मैंने 1 अक्टूबर को पोस्ट किया था और मेरी इस पोस्ट पर लगभग 3M व्यूज़ आए। आज आप सबको जानकर खुशी होगी कि कल गौरव से धोनी ने मुलाकात कर ली है, गौरव को धोनी के भाई ने फार्म हाउस घुमाया और धोनी से मुलाक़ात भी हुई। मुझे बहुत खुशी होती है जब मैं किसी… pic.twitter.com/jFbxb5MTlA “நீங்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதை நான் அக்டோபர் 1 அன்று வெளியிட்டேன். தற்போது வரை இந்த பதிவு சுமார் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தோனி நேற்று கௌரவை சந்தித்தார். தோனியின் சகோதரர் கௌரவிற்கு பண்ணை வீடு முழுவதையும் சுற்றி காட்டினார் என்ற செய்தியை கேட்டு அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்” என இந்தப் பய்திவிற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கௌரவ் குமார் தோனியை சந்தித்த தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். இறுதியாக, எனது நீண்ட நாள் கனவு நனவாகியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தோனியின் சகோதரர் பண்ணை வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார் என்றும் ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் தன்னால் அங்கு புகைப்படங்கள் எதையும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவரது ஆட்டோகிராப் எனக்கு கிடைத்தது, இதுவே எனக்கு போதும் என்றும் கூறினார். அமெரிக்காவில் நீண்ட விடுமுறையை கழித்த எம்எஸ் தோனி சமீபத்தில் இந்தியா திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்க்கில் (ஐபிஎல்) விளையாடுவது குறித்த தனது முடிவை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தோனி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிறகே சிஎஸ்கே தங்கள் தக்கவைப்பு பட்டியலை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.