TREND

பண்டிகை காலங்களில் கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் வேண்டுமா..? அப்போ இந்த மெத்தேடை ட்ரை பண்ணுங்க!

மாதிரி படம் நவராத்திரி, தீபாவளி மற்றும் சத் பூஜை போன்ற முக்கிய பண்டிகைகள் வரிசையாக வருவதால், இந்தியாவில் ரயில்களில் டிக்கெட் பெறுவது எளிதான விஷயம் அல்ல. பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகின்றன. இருப்பினும், ரயில்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளைப் பெறுவது கடினம். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். எத்தனை ரயில்கள் இயக்கினாலும் அனைவருக்கும் சீட் கிடைப்பது இல்லை. இந்த சிக்கலை தீர்க்க இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் பயணிகள் சிரமமின்றி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு VIKALP யோஜனா எனப்படும் மாற்று ரயில் தங்குமிடத் திட்டத்தை (ATAS) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பயணிகளை ஒரே நேரத்தில் பல ரயில்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. மேலும், இதைப் பயன்படுத்துவதன் மூலம் கன்ஃபார்ம் சீட்டை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம். இதையும் படிக்க: இந்தியர்கள் ‘இந்த’ 10 நாடுகளுக்கு ‘விசா’ இல்லாமல் செல்லலாம்.. எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா? லிஸ்ட் இதோ! இந்த தீபாவளி அல்லது சத் பூஜைக்கு நீங்கள் ஊருக்கு செல்ல விரும்பினால், விகல்ப் டிக்கெட் முன்பதிவு திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். VIKALP யோஜனாவில் டிக்கெட் முன்பதிவானது பயணத் தேதிக்கு 120 நாட்களுக்கு முன்பே திறக்கும். அவசர காலங்களில், பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் வசதியுடன் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். VIKALP திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது? ரயில்வே மாற்று ரயில் தங்குமிடம் (ATAS) திட்டத்திற்கு VIKALP என்று பெயரிட்டுள்ளது, இந்த திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு முடிந்தவரை கன்ஃபார்ம் டிக்கெட்டுகளை வழங்க முயற்சிக்கிறது. நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ​​தானாகவே VIKALP ஆப்ஷன் தோன்றும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், வழித்தடத்தில் உள்ள மற்ற ரயில்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. எனவே உங்கள் வழித்தடத்தில் உள்ள மற்ற ரயிலில் சீட்கள் இருந்தால், அந்த சீட் உங்களுக்கு ஒதுக்கப்படும். நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என பார்ப்பதன் மூலம் எந்த ரயிலின் சீட் கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். விகல்ப் விருப்பத்தின் மூலம் நீங்கள் பயணிக்க விரும்பும் நேரத்திலிருந்து 30 நிமிடங்கள் முதல் 72 மணி நேரத்திற்குள் போர்டிங் ஸ்டேஷனில் இருந்து இலக்கை அடைய பயணிகள் அதிகப்பட்சமாக 7 ரயில்களைத் தேர்வு செய்யலாம். இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் உறுதியாக டிக்கெட் பெற்று விட்டீர்கள் என அர்த்தம் இல்லை. கன்ஃபார்ம் சீட்டை பெறுவீர்கள் என்று அர்த்தமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரயில்களில் சீட்கள் கிடைப்பதைப் பொறுத்தது. இருப்பினும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கன்ஃபார்ம் சீட்டை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.