TAMIL-NADU

மெரினா பீச்சில் அட்ராசிட்டி செய்த ஜோடி... கைதுக்கு பின் புது ட்விஸ்ட்... நடந்தது என்ன?

சென்னை, மெரினா கடற்கரையில் மதுபோதையில் போலீசாரிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட தம்பதியின் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி எல்லை மீறிய ஜோடி யார்? நடந்தது என்ன? ஞாயிறு இரவு 12 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி விட்டு ஜோடி இருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? என விசாரித்துள்ளனர். காவலர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நபர், மாறாக கெட்ட வார்த்தைகளால் பேசி எல்லை மீறியிருக்கிறார். அவருடன் இருந்த பெண்ணும் காவலரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். வீடியோ எடுக்குறீயா? இந்தா எடுத்துக்கோ?. செல்ஃபி தரோம் என கெத்து காட்டுவதாக நினைத்து நிலைமை புரியாமல் நடந்து கொண்டனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்?: இருவரும் கணவன் - மனைவியா? நண்பர்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மயிலாப்பூர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். கார் பதிவெண்ணை எடுத்து விசாரித்ததில் அட்ராசிட்டியில் ஈடுபட்டவர்கள், சந்திரமோகன் - தனலட்சுமி என தெரியவந்தது. Also Read | நாளை உருவாகும் ‘டானா’ புயல்… எங்கு, எப்போது கரையை கடக்கும் தெரியுமா?… வெளியான அப்டேட் சென்னை முழுக்க சல்லடை போட்டு தேடியதில் சந்திரமோகன் தனலட்சுமி இருவரையும் வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர். ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு இடையே மன்னிப்பு கேட்டு சந்திரமோகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லாட்ஜில் வைத்து கைது செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவில், ஓவர் போதையில் நிதானம் இல்லாமல் பேசியதாக கூறி சந்திரமோகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே, பொது இடங்களில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து இது போன்று எல்லைமீறலில் நடந்து கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மெரினா கடற்கரையில் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி, மதுபோதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் தட்டி கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி எல்லை மீறினர். வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தை.. அவமதிப்பு.. காவலர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது என அடுத்தடுத்து க்ரைம் ரேட்டிங்கை ஏற்றி தவ்லத்தாக நடந்து கொண்ட இந்த ஜோடி மீது நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.