TAMIL-NADU

"அரசியல் கற்றுக்கொடுத்தவர் அவர்தான்" - முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் கலங்கிய முதல்வர்!

மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முரசொலி செல்வத்தின் திருவுருவப் படத்தை தி.க. தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் சத்யராஜ், “நானும் முரசொலியை படித்து வளர்ந்தவன் தான். நான் கல்லூரி படித்த காலத்தில் கலைஞர் படிப்பகம் என்று ஒன்று நடத்தப்பட்டு வந்தது. அந்தப் படிப்பகத்திற்கு சென்றால் அனைத்து பத்திரிகைகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு மிகப்பெரிய சிறப்பு. இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களில் முரசொலி படிப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாக நாங்கள் கருதினோம். 1984ல் எனக்கும், நண்பன் மணிவண்ணனுக்கும் நூறாவது நாள் என்கின்ற படம் வந்த பின்னர் நாங்கள் மிகவும் பிசியாகி விட்டோம். நடிகனாக வாழ்க்கை வாழ்ந்து வந்த வேளையில் திடீரென்று முத்தமிழர் கலைஞரின் புரொடக்ஷன் நிறுவனத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு வந்தது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக அமைந்தது. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நாங்கள் வசனம் எழுதி படம் இயக்கியது இல்லை படத்தில் தான் வசனங்கள் சேர்க்கப்படும். அப்படி இருக்கையில் எனது முதல் நாள் சூட்டிங் முரசொலி அலுவலகத்தில் தான் நடைபெற்றது. அப்பொழுதுதான் நான் முதன்முதலாக முரசொலி செல்வத்தை பார்த்தேன். குறிப்பாக என்னால் மறக்க முடியாது அவரது இல்லத்தின் சுவையான உணவுகள். அதுமட்டுமின்றி பூம்புகார் புரொடக்ஷன் நிறுவனம் என்னும் எனது பயத்தை போக்கியது முரசொலி செல்வம் தான். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் குடும்பத்தில் எங்களுக்கு முதல் நண்பனாக அறிமுகமாகியவர் முரசொலி செல்வம் தான். வயசு வித்தியாசம் இல்லாமல் மிகவும் எளிமையாக எல்லோரிடமும் பழகக்கூடிய ஒரு நபராக அவர் இருந்தார். குறிப்பாக அந்த புரொடக்ஷன் நிறுவனத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வசனங்களில் பேசி நடித்தது மிகப்பெரிய ஒரு அதிசயம். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞரே, நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் மணிவண்ணன் ஆகியோருக்கு எனது வசனத்தில் சிறிய திருத்தம் இருந்தால் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியும் நாங்கள் யாரும் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் அவரது வசனங்களையே பேசி நடித்து முடித்து தருணங்கள் அதிக அளவில் நினைவுக்கு வருகிறது. முரசொலி செல்லும், மிகவும் எளிமையாக பழகக் கூடியவர் என்று எண்ணியிருந்த வேளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், அவரை விட மிகவும் எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் பழகியது மிகவும் அதிசயமான ஒன்றாக நாங்கள் கருதினோம். நான் வில்லனாக எனது வாழ்க்கையை தொடங்கிய நாளிலும் கதாநாயகனாக நடித்த நாட்களிலும் வெற்றி படங்களுக்கு முத்தமிழர் கலைஞரிடம் தான் கேடயம் வாங்கியுள்ளேன். இதையும் படியுங்கள் : “2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம்” - சந்திரபாபு நாயுடு பேசியதன் பின்னணி என்ன? முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிறையில் இருக்கும் பொழுது நமது முதல்வர் பிறந்தார் நமது முதல்வர் சிறையில் இருந்த நேரத்தில் நமது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தார் இது போன்ற கொள்கை குன்றுகள் இருக்கும் வரை கழகத்தின் பணிகள் என்றும் தடைபடாது” என்று பேசினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், முரசொலி செல்வம் மறைந்ததை தம்மால் ஏற்கமுடியவில்லை என்று நா தழுதழுக்க பேசிய அவர், தனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.