BUSINESS

அழகுக்கலை துறையில் புதிய உச்சம்.. சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்!

அகஸ்டினஸ் பேடர் தயாரிப்புகள் பல்வேறு தளங்களில் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்துவரும் ரிலையன்ஸ் நிறுவனம் அழகுக்கலை துறையில் சர்வதேச ப்ராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இது அழகுக்கலை துறையில் புதிய உச்சம் என்று நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ரிலையன்ஸ் ரீடெய்லின் அழகு தளமாக TIRA (தீரா) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் ஏராளமான அழகுக்கலை தயாரிப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,, உலகளவில் புகழ்பெற்ற ஆடம்பர சரும மற்றும் முடி பராமரிப்பு பிராண்டான அகஸ்டினஸ் பேடரை இந்தியாவில் தீரா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச விருது பெற்ற பிராண்டின் தயாரிப்புகள் பிரீமியம் மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் இப்போது Tira-பிளாட்ஃபார்மில் கிடைக்கிறது உலகப் புகழ்பெற்ற ஸ்டெம் செல் மற்றும் பயோமெடிக்கல் விஞ்ஞானி பேராசிரியர் அகஸ்டினஸ் பேடரால் இந்த பிராண்ட் தொடங்கப்பட்டுள்ளது. , இந்த பிராண்ட் 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகளவில் இதற்கான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அகஸ்டினஸ் பேடரின் முன்னணி விற்பனை பொருட்கள் சலுகை விலையில் தீரா கடைகளில் கிடைக்கும். இந்த பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்று தீராவின் இணை நிறுவனர் பக்திமோடி கூறுகையில், ‘தீராவுடைய இலக்கு என்னவென்றால் சர்வதேச அளவில் சிறந்ததாக இருப்பவற்றை உள்ளூருக்கு கொண்டு வந்து இந்திய கஸ்டமர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான். இந்தியாவில் இப்போது அகஸ்டினஸ் பேடரை அறிமுகம் செய்துள்ளோம். இது ஆடம்பர துறையில் ஒரு புதிய உச்சத்தை எட்டக் கூடிய நடவடிக்கை. உலக அளவில் பெயர் பெற்றுள்ள இந்த பிராண்ட் இந்தியாவிலும் எண்ணற்ற வாடிக்கையாளர்களை பெறும் என்று கருதுகிறோம்’ என தெரிவித்தார். அகஸ்டினஸ் பேடரின் இணை நிறுவனர் சார்லஸ் ரோசியர் கூறுகையில், ‘எங்கள் பிராண்டை இந்தியாவில் மிக்க மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்கிறோம். எங்கள் தயாரிப்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. எங்கள் தயாரிப்புகளின் தரத்தை தீரா நன்றாக புரிந்து கொண்டுள்ளது. இந்திய சந்தை குறித்து நுட்பமாக புரிந்து வைத்துள்ள தீராவுடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியுள்ளோம். இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டும். அழக்கலை சந்தையில் இந்தியா மிகவும் குறிப்பிடத்தக்க நாடாகும். இங்கு நாங்கள் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சியான தருணம்’ என்று தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.