BUSINESS

நேந்திரன் வாழையில் மகசூல் பெருக இது தான் வழி... விவசாயி சொல்லும் சக்சஸ் ஃபார்முலா...

நேந்திரன் வாழை உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 25.58 சதவிகிதம் ஆகும். சுமார் 0.995 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 34.9 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழை 11.360 ஹெக்டேரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிக வாழை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி. திருச்சி, ஈரோடு. கன்னியாகுமரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, நெய்பூவன். நேந்திரன், செவ்வாழை, ரோபஸ்டா போன்ற ரகங்கள் சமவெளி பகுதிகளிலும், விருபாக்சி, சிறுமலை, லாடன், மட்டி, நமரை ஆகிய ரகங்கள் மலை பகுதிகளிலும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும், வியாபார ரீதியாக நேந்திரன் ரக வாழைக்கு நல்ல விளைச்சல் மற்றும் விலை கிடைப்பதால் நான் நேந்திரன் இரக வாழையை கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் கிராமத்தில் உள்ள நாணலாடித் தோட்டத்தில் சுமார் 3500 வாழை 2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடவு செய்தேன். அதன் பயனாக நல்ல விளைச்சல் பெற்று அறுவடை விழா நடத்தத் திட்டமிடப்பட்டது. இதையும் படிங்க: எங்க இருந்து டூரிஸ்ட் வந்தாலும் 1st விசிட் இங்க தான்… கண்களைக் கவரும் காட்டேரி பூங்கா… நேந்திரன் வாழையைப் பற்றி கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், “நான் குனியமுத்தூரில் விவசாயம் செய்து வருகிறேன். பெரும்பாலும் இது கரும்புக்கு ஃபேமஸ் ஆன ஏரியா. இந்த பூமியை கரவலி பூமி என்று சொல்வார்கள். இதில் கரும்பு தான் மிகப் பிடித்தமான கிராப் ஆக இருந்தது. கொஞ்ச நாள் போக போக ஆட்கள் பற்றாக்குறை காரணத்தால் வேறு பயிரிடலாம் என யோசித்தேன். அப்போது வாழை மிகவும் பொருத்தமாக இருந்தது. இந்த வாழையில் நிறைய ரகங்கள் இருக்கிறது. பூவன், ரஸ்தாலி, g9, நேந்திரன், செவ்வாழை எத்தனையோ வகைகள் இருக்கிறது. அதில் எங்களுக்கு நேந்திரன் பொருத்தமாக இருந்தது. நாங்கள் கடைசியாகச் சாகுபடி எடுத்ததில் சுமார் 25 கிலோ ஒரு வாழைக்கு எடுத்தோம். என்னுடைய அதிகபட்ச மகசூல் 35.24 கிலோ வந்தது. ஒரு கிலோ ரூ.40க்கு விற்றால் எங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வாழை என்றால் வரிசைக்கு ஆறு அடியும், வாழை கண்ணுக்கு ஆறடியும் இடைவெளி விட்டு போடுவார்கள். அவ்வாறு போட்டால் ஏக்கருக்கு 1,100 முதல் 1200 வாழை வரும். ஆனால் நாங்கள் ஒவ்வொரு கண்ணுக்கும் 7 அடி இடைவெளி விட்டு, வரிசைக்கு 6 அடி இடைவெளி விட்டோம். இவ்வாறு அமைத்ததால் 1,000இல் இருந்து 1050 தான் வந்தது. இதில் நல்ல மகசூல் கிடைத்ததால் அது வாழை கன்று குறைந்ததை ஈடுகட்டி விட்டது. இதையும் படிங்க: வனப்பகுதியில் வாழ்க்கை நடத்தும் மலசார் பழங்குடி மக்கள்… தேடிச்செல்லும் அடிப்படை வசதிகள்… இந்த நேந்திரன் வாழை மிகவும் உயரமாக வளரக்கூடியது. அவ்வாறு உயரமாக வளர்வதால் அதற்கு கம்பு வைத்து கட்ட வேண்டும் அல்லது ரப்பர் வைத்து கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். இந்த வேர் நன்றாக கீழே போக வேண்டும் என்றால் நிலத்தை நம் பண்படுத்த வேண்டும். இதில் ரிவர்சபில் ஃப்ளோ என்ற ஒன்று உள்ளது. அதில் 2 அடி 2 1/2 அடிக்கு கீழே சாயில் போகிறது. ஆழமாக உழுது ரோட்டோவேட்டர் மூலம் நிலத்தைச் சமப்படுத்துகிறோம். நிலத்தை சமப்படுத்திய பிறகு ஏர் கலப்பையை வைத்து 7 அடிக்கு 7 அடி நிலத்தை உழுகிறோம். நாங்கள் கால் அடி ஆழத்தில் நடுவதால் ஒன்றரை அடி ஆழத்தில் கன்று செல்கிறது. அதனால் நன்றாக பூமியில் உள்ளே இருப்பதால் பக்கக்கன்றுகள் வருவதற்கு ஏதுவாக உள்ளது. அவ்வாறு பக்க கன்று வருவதால் வாழை சாயாமல் இருக்க ஏதுவாக உள்ளது. ஆனால் எங்களுக்கு 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் மிச்சமானது. வாழைக்கு கம்பு கட்ட வேண்டும் என்றா ஆள் கூலியும் 15 ஆயிரம் முதல் செலவாகும். இவ்வாறு செய்ததால் எங்களுக்கு அந்த செலவு மிச்சமானது. மேலும் நாங்கள் சொட்டு நீர் பாசனம் கொடுத்ததால் வாழையின் வேர்களில் மட்டுமே நீர் செல்லும். இவ்வாறு கொடுப்பதால் வாழைக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாக கிடைத்து விடுகிறது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: தசரா மட்டுமில்லை மயானக் கொள்ளைக்கும் இது தான் முக்கியம்… வேடம் கட்ட தயாராகும் பொருட்கள்… இதைத் தொடர்ந்து விவசாயி கண்ணன் கூறுகையில், “என் சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர். நான் கோயம்புத்தூரில் 20 வருடங்களாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். எங்களுடைய தொழிலே விவசாயம் தான், அதிலும் வாழைக் கன்று பிசினஸ். விவசாயிகளுக்கு வாழைக் கன்று கொடுப்பது முதல், அதற்குக் கயிறு கட்டுவது வரை அனைத்தும் செய்து கொடுத்து வருகிறேன். நல்ல பூமி கிடைத்தால் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை, நல்ல தண்ணீர் கிடைத்தால் நல்ல பூமி கிடைப்பதில்லை. குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்து பார்த்தோம். அப்போது தான் குனியமுத்தூரில் செல்வராஜ் சார் பழக்கமானார். எங்களிடம் வந்து நல்ல பூமியும் நல்ல நேரம் உள்ளது நன்றாக பண்ணி கொடுங்கள் என்று கேட்டார். பண்ணிக் கொடுக்கலாம் என்று சொல்லி ரிவர் போர் போட்டு ஏழுக்கு ஏழு பார் ஓட்டி, வாழைக்கன்று அரை கிலோ இருந்து முக்கா கிலோ வரை எடுத்து எல்லாம் பண்ணி. முதல் உரம் அறுபது நாளிலிருந்து ஆரம்பித்தோம். மண்ணிற்குத் தகுந்த மாதிரி டெஸ்ட் அனைத்தும் எடுத்து கொடுத்தார்கள். அனைத்தும் வெற்றிகரமாகச் செய்து 35 கிலோ வரை எடுத்தோம். ஆவரேஜ் ஆக 26 கிலோ வரை வந்தது. இதில் இன்னும் ஒன்று என்னவென்றால் செல்வராஜ் சார் அக்ரியில் இருப்பதால் எனக்கு பக்கபலமாக இருந்து, அனைத்தையும் செய்து கொடுத்தார். அடுத்ததாக நாங்கள் 3 ஏக்கரில் வாழை நட்டு இருக்கிறோம். இதைவிட அதிக லாபம் அடைய வேண்டுமென்று செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.