BUSINESS

பிபிஃப், கேவிபி, போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகள் போன்ற சிறு சேமிப்பு திட்டங்கள்... வட்டி விகிதங்கள் இதுதான்!

மாதிரிப்படம் முதலீட்டாளர்கள் தங்கள் வருவாயைப் பெருக்க பங்குச் சந்தையை நோக்கி நகர்ந்தாலும், அவர்கள் தங்கள் சொத்து ஒதுக்கீட்டைப் பன்முகப்படுத்த நிலையான வருமானம் வரும் முதலீட்டு திட்டங்களையும் எதிர்பார்க்கிறார்கள். பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) மற்றும் தபால் அலுவலக வைப்புத்தொகை போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் நிலையான வருமானத்தை தருவதோடு பாதுகாப்பான அரசாங்க உத்தரவாதம் மிக்க சேமிப்புக் திட்டங்களாகும். இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்துகொள்வோம். தற்போது, ​​பிரபலமாக இருக்கும் பிபிஃப் மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக உள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. இதில் முதலீடு செய்யும் தொகைகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். தேசிய சேமிப்புச் சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவே உள்ளது. மாதாந்திர வருமான திட்டத்திற்கான வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீதம் தருகிறது. பிபிஃப், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் டெர்ம் டெபாசிட், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் எஸ்எஸ்ஒய் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அடுத்த காலாண்டிற்கு முடிவு செய்யப்படுகின்றன. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்: சேமிப்பு டெபாசிட்: 4 சதவீதம் 1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம் 2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம் 3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.1 சதவீதம் 5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம் 5-ஆண்டு தொடர் வைப்புத்தொகை: 6.7 சதவீதம் தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC): 7.7 சதவீதம் கிசான் விகாஸ் பத்திரம்: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்) பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம் சுகன்யா சம்ரித்தி கணக்கு: 8.2 சதவீதம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.2 சதவீதம் மாதாந்திர வருமானக் கணக்கு: 7.4 சதவீதம். சிறு சேமிப்புத் திட்டங்களில் சேவிங் டெபாசிட், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன. Also Read | பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே! சேமிப்பு டெபாசிட்களில் 1-3 வருட கால வைப்பு மற்றும் 5 வருட தொடர் வைப்புகளும் அடங்கும். தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இதில் அடங்கும். சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும். மாத வருமானத் திட்டத்தின் கீழ் மாதாந்திர வருமானக் கணக்கு உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.