BUSINESS

ரூ.1 கோடி பெறும் வாய்ப்பை நிராகரித்து, ரூ.500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண்!

புதுமையாக யோசிப்பதும், நமக்கான வாய்ப்பை தேடி கண்டடைவதுமே தொழில் வெற்றிக்கு அடிப்படையாகும். இதை பின்பற்றி தொழிலில் சாதித்துள்ளார் ஒரு பெண். வெளிநாட்டு அழகு சாதனப் பிராண்டுகள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த போது, ​​ இந்தியத் தோல் நிறத்துக்காகத் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான இடைவெளி சந்தையில் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இந்த இடைவெளியைக் கவனித்து, சந்தையை முழுமையாக மாற்றுவதற்கான வாய்ப்பைக் கண்டார் வினீதா சிங். அப்படி இவர் புதுமையான எண்ணத்துடன் தொடங்கியது தான் சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics). இந்நிறுவனம் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை தொடங்கிய வினிதா சிங், வெற்றிகரமான தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக இருக்கிறார். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பிறந்த வினிதா, இளம் வயதிலேயே ஆர்.கே.புரத்தில் இருந்த டெல்லி பப்ளிக் ஸ்கூல் தனது கல்வித் திறனை வெளிப்படுத்தி வந்தார். எதிர்காலத்தில் இவர் மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்பதை அப்போதே அனைவருக்கும் வெளிப்படுத்தினார். 2015-ல் ஐஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், 2017-ல் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றார். இந்தியப் பெண்களின் அழகுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நேரடி நுகர்வோர் பிராண்டாக இருந்த காரணத்தினால் இளம் பெண்கள் மத்தியில் சுகர் அழகுசாதனப் பொருட்கள் வேகமாகப் பிரபலமடைந்தன. மேலும் தங்கள் நிறுவனத்திற்கென பிரத்யேகமான உருவாக்கப்பட்ட Sugar செயலி, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வினிதா தனது தயாரிப்புகளை திறம்பட சந்தைப்படுத்த முடிந்தது. ஆரம்பத்தில் குறைவான விலையுடன் பொருட்களை விற்பனை செய்து, நாடு முழுவதும் படிப்படியாக வளரத் தொடங்கி தற்போது 130 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. சுகர் அழகுசாதனப் பொருட்களின் விற்பனை தொடங்கப்பட்டு வெறும் எட்டு ஆண்டுகளில் ரூ. 500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி, அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் முக்கியமன இடத்தைப் பிடித்தது. வினிதாவின் கணவரான கௌசிக் முகர்ஜி, தனது மனைவியின் தொழில் வெற்றிக்கு உறுதுணையாகவும் முக்கிய ஆதாரமாக இருந்தார். அதோடு மட்டுமின்றி நாடு முழுவதும் வணிகத்தை விரிவுப்படுத்தவும் அதில் வெற்றிபெறவும் உதவினார். Also Read | 95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா? தன்னுடைய தொழிலில் மட்டுமல்லாமல் இன்னும் பல விஷயங்களில் வினிதா அதிகமாக சாதித்துள்ளார். இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோது மும்பை மராத்தான் (நீண்ட தூர ஓட்டப்பந்தயம்) போட்டி உட்பட 20 மராத்தான் மற்றும் அல்ட்ராமாரத்தான்களில் ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக பங்கேற்றுள்ளார். முறையாக, கவனம் செலுத்தி எப்படி தனது தொழிலை ஆர்வத்துடன் அணுகுவாரோ, அதேப்போல் தனது உடல்நலத்தின் மீதும் அர்ப்பணிப்போடு இருக்கிறார் வினிதா. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.