BUSINESS

மேட்டூர் அணை உபரி நீர் வீணாகாது... சரபங்கா திட்டத்தால் பயன்பெறும் 1 லட்சம் ஏக்கர் நிலம்...

உபரி நீரை சேமிக்கும் திட்டம் நீரின்றி அமையாது உலகு என்பது போல், விவசாயம் செய்ய நீர் ஆதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நீரின்றி எண்ணற்ற விவசாய நிலங்கள் வறண்ட பூமியாகக் காணப்படுகிறது. மழை நீரை நம்பியே நிறைய வானம் பார்த்த பூமி தமிழகத்தில் பலவும் உள்ளன. மழையில்லாத காலங்களில் தான் நிலை இப்படி உள்ளதெனப் பார்த்தால் நன்கு மழை பெய்யும் சமயங்களில் அணைகள் நிரம்பி உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வாகத் தான் சேலத்தில் மேட்டூர் அணை உபரி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரை 100 ஏரிகளுக்குக் கொண்டு சென்று நிரப்புவதே திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இந்த திட்டத்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் வளம்பெறும் எனக்கூறப்படுகிறது. மேட்டூர் அணை 120 அடி கொள்ளளவைக் கொண்டது. மழைக்காலங்களில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையில் நீர்மட்டம் உயர்கிறது. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பும் போது அதன் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. இதையும் படிங்க: குமரியில் மலையோர கிராமங்களில் விளையும் பழங்கள்… விரும்பி வாங்கிச் செல்லும் வியாபாரிகள்… தமிழகத்தில் உள்ள அணைகளில் முக முக்கிய அணைகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் உபரி நீர் வீணாகக் கடலுக்குச் செல்லும் சமயங்களில் எல்லாம் விவசாயிகள் வேதனை அடைவதுண்டு. இதனைத் தவிர்க்கவே மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது சரபங்கா நீரேற்று திட்டம் அல்லது மேட்டூர் உபரி நீர் திட்டம் இன்று அழைக்கப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் காளேஸ்வரம் நீரேற்றும் திட்டம் போல் சேலம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை சரபங்கா பாசனப் பகுதியில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு 545 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது மேட்டூர் அணையின் உபரி நீர் 56 நீர்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் அளவிற்குப் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் பெருமளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதையும் படிங்க: ஆங்கிலேயரைக் கவர்ந்த ஸ்விட்சர்லாந்து போன்ற கிளைமேட்… நீலகிரியை உருவாக்கிய கலெக்டர்… இந்த உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் படி, மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் திப்பம்பட்டி நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலமாக மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள 56 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தில் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து முதலாவதாக எம்.காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, சின்னனேரி, மானத்தாள் ஏரி, டி,மாரமங்களம் ஏரிக்கு தண்ணீர் குழாய் மூலம் அனுப்பப்பட்டது. பின்னர், நங்கவள்ளி குட்டை, வனவாசி ஏரி, கண்கான் ஏரி உள்ளிட்ட 56 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் 4,016.16 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது. இதையும் படிங்க: நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்தால் ரிஸ்க்… நோயில்லாத வாழ்வு பெற இது தான் சீக்ரெட்… இத்திட்டத்தின் பணி இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. ஏரிகளுக்கு நீரினைக் கொண்டு சேர்க்கும் ராட்சத பைப் பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் பணி முழுமை பெறும் பட்சத்தில் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறும். கரும்பு, வாழை, நெல் போன்றவை பயிர் செய்யப்பட்டு விவசாயிகள் மிகுந்த பயனடைவார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் முழுமையடையாத நிலையிலும் கூட அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட பெருமளவு உபரி நீரின் மூலம் 56 நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.