BUSINESS

சிறிய தையல் கடையை ரூ.12,930 கோடி நிறுவனமாக மாற்றிய நபர்... உத்வேகமூட்டும் வெற்றி கதை!

தொழிலதிபர்களின் வெற்றிக் கதைகள் மிகவும் எப்போதுமே உத்வேகம் அளிக்கக்கூடியவை. ஏனெனில் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் எத்தனையோ சந்தித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் கதை பெரும் வெற்றியில் முடிவடைகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸின் (Prestige Estates Projects) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான இர்பான் ரசாக்கின் வெற்றிக் கதையை தான் தற்போது நாம் பார்க்கப் போகிறோம். வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ரசாக். இவருடைய தந்தை ரசாக் சத்தார், 1950-ம் ஆண்டு பெங்களூருவில் ஒரு சிறிய துணி மற்றும் தையல் கடையுடன் சேர்த்து பிரஸ்டீஜ் குழுமத்தை தொடங்கினார். ரசாக்கின் தலைமையின் கீழ், ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தவிர்க்க முடியாத முக்கியமான நிறூவனமாக மாறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு, வணிகம், சில்லறை விற்பனை மற்றும் ஹோட்டல் பிரிவுகளில் என ஏராளமான திட்டங்களுடன், இந்நிறுவனம் இதுவரை 285 திட்டங்களை முடித்துள்ளதோடு 54 திட்டங்களுக்கான பணிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் திட்டங்களின் பங்குகள் 60% அதிகரித்ததன் காரணமாக, இர்ஃபான் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிகர சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. DLF நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட சொத்து நிறுவனமாக கம்பீரமாக நிற்கிறது பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ். ஆப்பிள், கேட்டர்பில்லர், அர்மானி மற்றும் லூயிஸ் உய்ட்டன் போன்ற உலகளாவிய பிராண்டுகள் பிரஸ்டீஜ் நிறுவனத்தின் புகழ்பெற்ற வாடிக்கையாளர்கள் ஆவர். 1990-ல் பெங்களூருவில் தனது இரண்டாவது ரியல் எஸ்டேட் திட்டத்தை விற்று ஓய்வு பெற விரும்பினாலும், ரசாக்கின் தொழில் முனைவோர் ஆர்வம், பிரெஸ்டீஜ் எஸ்டேட் நிறுவனத்தை ரியல் எஸ்டேட் துறையிலேயே மிகப்பெரிய ஜாம்பவானாக மாற்ற வழிவகுத்தது. தற்போது, ​​ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் பெங்களூரைத் தாண்டி சென்னை, கொச்சி, காலிகட், ஹைதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்கள் வரை விரிவடைந்துள்ளது. நடுத்தர வர்க்க பிரிவினர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தனது வருடாந்திர விற்பனையை அதிகரிக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறது. Also Read | ஏர் ஹோஸ்டஸ் சம்பளம்: விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா? ரசாக்கின் இளைய சகோதரர்களான ரெஸ்வான் மற்றும் நோமன் ஆகியோரும் இந்நிறுவனத்தின் மகத்தான வெற்றிக்கு பங்களித்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர்களுடைய துணி மற்றும் தையல் கடை இன்னும் ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸின் ரியல் எஸ்டேட் திட்டங்களுடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது 2024-ம் ஆண்டில், இர்பான் ரசாக்கின் நிகர சொத்து மதிப்பு $1.3 பில்லியன் அல்லது இந்திய மதிப்பில் ரூ.108,678,802,700 ஆகும். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது. 2023 நிதியாண்டில், இவர்களுடைய நிறுவனம் ரூ.12,930 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. 2024-ம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் ‘உலக பில்லியனர்கள்’ பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.