BUSINESS

கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!

இன்றைய காலத்தில் பெண்கள் எவரையும் சார்ந்திராமல் சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும் புதிதான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குமான சுதந்திரத்தை பெற்றுள்ளனர். பல பெண்களின் கதைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு பலருக்கும் முன்னோடியாக இருக்கும் ஒரு பெண்ணை குறித்து தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள போகிறோம். இந்தியாவின் ஆரோக்கியமான சிற்றுண்டி நிறுவனமான ஓபன் சீக்ரெட்டின் (Open Secret) நிறுவனர் அஹானா கௌதம். ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த அஹானா, அதன்பிறகு அமெரிக்கா சென்றார். பின்னர் 2014-2016 வரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தார். அதன்பின்னர், நான்கு வருடங்கள் Procter and Gamble (P&G) நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். இருப்பினும், இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக, பணியாற்றி வந்த வேலையை ராஜினாமா செய்த அஹானா 2019-ம் ஆண்டில், தனது தாயிடம் பெற்ற கடன் தொகையை முதலீடாக கொண்டு Open Secret நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவில் பணியாற்றிய சமயத்தில் அங்கிருந்த Whole Foods கடைகளில் ஆரோக்கியமாக சாப்பிடுவதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அஹானா. செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்ட ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக இவரது நிறுவனம் சத்தான தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறது. 2023-ம் ஆண்டில் இவரது ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், நாம் நினைப்பது போல் அஹானாவின் தொழில் முனைவோர் பயணம் சுமூகமானதாக இல்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது விடாமுயற்சியாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் கடுமையான உழைப்பாலும் அத்தனை தடைகளையும் வென்று வெறும் 3 வருடங்களில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ் செய்திகள் / வணிகம் / கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..! கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..! பல பெண்களின் கதைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு பலருக்கும் முன்னோடியாக இருக்கும் ஒரு பெண்ணை குறித்து தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள போகிறோம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 13, 2024, 8:23 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் இன்றைய காலத்தில் பெண்கள் எவரையும் சார்ந்திராமல் சுயமாக முடிவெடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும் புதிதான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குமான சுதந்திரத்தை பெற்றுள்ளனர். பல பெண்களின் கதைகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு பலருக்கும் முன்னோடியாக இருக்கும் ஒரு பெண்ணை குறித்து தான் இப்போது நாம் தெரிந்துகொள்ள போகிறோம். இந்தியாவின் ஆரோக்கியமான சிற்றுண்டி நிறுவனமான ஓபன் சீக்ரெட்டின் (Open Secret) நிறுவனர் அஹானா கௌதம். ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த அஹானா, அதன்பிறகு அமெரிக்கா சென்றார். பின்னர் 2014-2016 வரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தார். விளம்பரம் அதன்பின்னர், நான்கு வருடங்கள் Procter and Gamble (P&G) நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றினார். இருப்பினும், இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக, பணியாற்றி வந்த வேலையை ராஜினாமா செய்த அஹானா 2019-ம் ஆண்டில், தனது தாயிடம் பெற்ற கடன் தொகையை முதலீடாக கொண்டு Open Secret நிறுவனத்தை தொடங்கினார். ஒரே நாளில் சர்ரென உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? - 13 August விளம்பரம் அமெரிக்காவில் பணியாற்றிய சமயத்தில் அங்கிருந்த Whole Foods கடைகளில் ஆரோக்கியமாக சாப்பிடுவதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் அஹானா. செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவை சேர்க்கப்பட்ட ஜங்க் உணவுகளுக்கு மாற்றாக இவரது நிறுவனம் சத்தான தின்பண்டங்களை விற்பனை செய்து வருகிறது. ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த 11 பழங்கள்.! மேலும் செய்திகள்… 2023-ம் ஆண்டில் இவரது ஸ்டார்ட்அப் நிறுவனம் ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், நாம் நினைப்பது போல் அஹானாவின் தொழில் முனைவோர் பயணம் சுமூகமானதாக இல்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தனது விடாமுயற்சியாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் கடுமையான உழைப்பாலும் அத்தனை தடைகளையும் வென்று வெறும் 3 வருடங்களில் வெற்றி பெற்றுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Business First Published : August 13, 2024, 8:23 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.