BUSINESS

சொந்த ஊரிலே எளிய முறையில் சிறந்த லாபம் எடுக்கலாம்... நாட்டு மாடு வளர்க்கும் ஐடி ஊழியர்...

நாட்டு மாடு வளர்க்கும் ஐடி ஊழியர் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அடுத்துள்ள தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்திப் ராமன். இவர் சிறு வயது முதலே ராணுவ பள்ளிகளில் கல்வி பயின்று டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பைப் பாதியை நிறுத்தி ஐடி துறையில் 14 ஆண்டுகளாக பணி அனுபவம் பெற்றிருந்தார். கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் விதமாக ஐடி நிறுவனங்கள் இயங்கியதால் கிராமத்திற்கு வந்தவர் நாட்டு மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். முதலில் இவர்கள் வீட்டு தேவைக்காக ஒரு நாட்டு மாடை வாங்கி பால் கறந்து பயன்படுத்தி வந்தவர் நாளடைவில் நாட்டு மாடுகளின் புதிய ரகங்கள் மற்றும் அதன் தன்மைகளை ஆராயும் விதமாக அதன் மீது ஈர்ப்பு கொண்டு கிர், காங்கேயம், மற்றும் பல ரகங்களில் நாட்டு மாடுகளை வாங்கி பராமரித்து வருகிறார். இவர் ஆரோக்கியமான தீவனங்களையும் மாடுகளுக்கு வழங்கி சிறந்த பராமரிப்பு அளித்து வருவதால் ரசாயனம் இல்லாத சுத்தமான பால் கிடைக்கின்றது. இதனைப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம் எளிதாக ஜீரணிக்கும் தன்மை உடையதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றார். இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டின் முக்கியத்துவம்… வழிபாடு செய்ய உகந்த நேரம் எப்போது..? நாட்டு மாடுகளின் நலன்களை அறிந்தவர்கள் இந்த மாட்டுப் பாலை கேட்டு வாங்குகின்றனர். இதனால் ஆன்லைன் முறையிலேயே கேட்பவர்களுக்கு ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் இந்த மாட்டுப் பாலை கொண்டு போய் குடிக்கிறோம் என தெரிவிக்கின்றார். நாட்டு மாடுகள் நம் மீது அதிக பாசம் கொண்டவையாக இருக்கும். யாரேனும் நம்மிடம் சத்தமாகவோ கோபமாகவோ பேசினாலே நம்மை பாதுகாக்கும் விதமாக நம் முன்னே வந்து நிற்கும் என தெரிவிக்கின்றார் சந்திப் ராமன். நவீன காலகட்டத்தில் பல்வேறு துரித உணவுகளை உண்டு அதன் பின்னர் மருத்துவமனைக்குப் பணத்தைச் செலவழிப்பதை விட ஆரோக்கியமான உடல் நிலையைப் பாதுகாத்து உடலுக்கு மேலும் நன்மை அளிக்கக்கூடிய நாட்டு மாட்டுப் பாலை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த வகையான மாடுகளை வளர்ப்பதிலும் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார். சமீப காலங்களில் ஐடி துறையில் ஹைபை வாழ்க்கை வாழும் பலருக்கு மத்தியில் 50% ஐடி துறையின் பணியையும் 50% நாட்டு மாடு வளர்ப்பிலும் ஆர்வம் காட்டும் இது போன்ற இளைஞர்களின் வாழ்வாதாரம் பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.