BUSINESS

Home Loan | ஹோம் லோனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கனுமா..? அப்ப இந்த 7 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

சொந்த வீடு என்பது அனைவரது கனவாகவே இருக்கும். அதுவும் சொந்த ஊரை விட்டு விட்டு நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த வீடு என்ற ஏக்கத்திலேயே வாழ்ந்து வருவார்கள். இந்த நிலையில் நீங்கள் புதிதாக வீடு ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா.? ஆனால் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கிறதே நம் கனவை நிறைவேற்றி கொள்ள முடியுமா என்று கவலைப்படுகிறீர்களா. அப்படி என்றால் கவலையை விடுங்கள், ஏனென்றால் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், உங்கள் வீடு வாங்கும் கனவை மிகவும் எளிதாக மாற்றுவதற்கும் பயனுள்ள சில உத்திகள் உள்ளன. ஹோம் லோன் வாங்கும் போது உங்களுக்கு ஏற்ற சிறந்த வட்டி விகிதத்தை பெறவும், வீட்டு கடன் காட்டினாலும் கூட குறிப்பிட்ட அளவு பணத்தைச் சேமிக்கவும் உதவும் சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள்: உங்களது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் நீங்கள் ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் வங்கிகள் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் நீங்கள் கேட்கும் கடனை வழங்கலாம். எனவே ஏற்கனவே இருக்கும் லோன்களை குறைப்பதன் மூலமும், சரியான நேரத்தில் பில்களை செலுத்துவதன் மூலமும், உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் பிழைகள் உள்ளதா என அடிக்கடி சரிபார்ப்பதன் மூலமும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி கொள்ளுங்கள். கடன் காலத்தை நீங்களே தேர்வு செய்யுங்கள்: கடன் காலம் என்பது நீங்கள் கடனாக வாங்கிய முழு தொகையையும் செலுத்த, நீங்கள் EMI செலுத்தும் மொத்த கால அளவு ஆகும். பொதுவாக குறுகிய காலங்களில் செலுத்த கூடிய ஆப்ஷனை தேர்வு செய்வது குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஆனால் அதே நேரம் மாதாந்திர அடிப்படையில் நீங்கள் செலுத்த போகும் அதிக தொகை உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதை முதலில் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் கடன் கேட்கும் வங்கியுடன் பேசுங்கள்: உங்களின் கிரெடிட் ப்ரொஃபைல் சிறப்பாக இருக்கிறது என்றால் நீங்கள் கடன் பெற நினைக்கும் வட்டி விகிதத்தில் ஹோம் லோனை வழங்க சொல்லி குறிப்பிட்ட வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாருங்கள். வேறு வங்கியில் என்னுடைய கிரெடிட் ப்ரொஃபைலுக்கு இவ்வளவு குறைந்த வட்டியில் எனக்கு ஹோம் லோன் அளிக்க தயாராக இருக்கிறார்கள் என்று கூறி அவர்கள் சலுகைகளை வழங்கவும் மற்றும் உங்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் வங்கியிடம் பேசுங்கள். இதையும் படிக்க: 3 வருடங்களுக்கு பிக்சட் டெபாசிட் பண்றீங்களா… இந்த 5 வங்கிகள் தான் பெஸ்ட்… எவ்வளவு வட்டினு தெரிஞ்சா அசந்துடுவீங்க ! முதலில் செலுத்தும் டவுன் பேமென்ட்டை அதிகமாக செலுத்துங்கள்: நீங்கள் கட்டும் டவுன்பேமென்ட் பணம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். இது உங்களின் கடன் தொகையை குறைப்பதோடு, குறைந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் கிடைக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் வாங்க போகும் வீட்டின் மதிப்பில் 20% அல்லது அதற்கு மேலான பணத்தை முதலிலே டவுன் பேமென்ட்டாக செலுத்த கருத்தில் கொள்ளுங்கள். ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்யுங்கள்: ஹோம் லோனுக்கான வட்டி விகிதத்தை தேர்வு செய்யும் போது ஃப்ளோட்டிங் அல்லது வேரியபிள் வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கவும். மார்க்கெட் ரேட்ஸ் குறைந்தால் இது ஃபிக்ஸ்ட் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும். எனினும் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் நிதி நிலைமை மற்றும் risk tolerance (எதிர்கொள்ள தயாராக இருக்கும் இழப்பின் அளவு) மதிப்பிட்டு கொள்ளுங்கள். உங்கள் ஹோம் லோனை ட்ரான்ஸ்ஃபர் செய்வதை கருத்தில் கொள்ளுங்கள்: நீங்கள் ஹோம் லோன் வாங்கிய பிறகு குறிப்பிட்ட வங்கி உங்களுக்கு கடனை திருப்பி செலுத்தஅளித்துள்ள வட்டி விகிதம் உங்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், சிறந்த வட்டி விகிதன்ங்களில் கடனை திருப்பி செலுத்த உதவும் வேறு வங்கிக்கு உங்கள் வீட்டுக் கடனை ட்ரான்ஸ்ஃபர் செய்வது பற்றி பரிசீலிக்கலாம். வேறு வங்கிக்கு உங்கள் ஹோம் லோனை மாற்றுவது உங்களுக்கு பலனளிக்குமா என்பதை தீர்மானிக்க கட்டணங்கள் மற்றும் ட்ரான்ஸ்ஃபர் செலவுகளை ஒப்பிட்டு பார்க்கலாம். கடனை முன்கூட்டியே செலுத்துதல்: உங்கள் கடனின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவது கட்ட வேண்டிய அசலை குறைக்கும் மற்றும் உங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்கலாம். வழக்கமான அடிப்படையில் உங்கள் கடனுக்கான பணத்தை ப்ரீபேமென்ட் செய்வது, உங்கள் கடன் காலம் முழுவதும் வட்டியை சேமிக்க உதவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.