BUSINESS

3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்கள்... 5 வங்கிகளின் லிஸ்ட்!

மாதிரிப்படம் ஒரு வங்கியில் நிலையான வைப்புத்தொகையை (FD) தொடங்குவதற்கு முன், முதலீட்டாளர்கள் வங்கி வழங்கும் வட்டி விகிதங்களை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும். பொதுவாக வங்கிகள் நீண்ட கால டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதன் பொருள் என்னவென்றால், திட்டத்தின் காலம் அதிகரிக்க அதிகரிக்க, வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதற்கு மாறாக, குறுகிய கால அளவு என்றால், வட்டி விகிதமும் குறைவாக இருக்கும். முதலீட்டாளர்கள் தாங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் திறக்கவே பெரிதும் ஆசைப்படுவார்கள். இருப்பினும், வட்டி விகிதங்களில் கணிசமான வித்தியாசம் இருக்கும்போது, ​​தங்களது வருவாயை அதிகரித்து கொள்ள மற்றொரு வங்கியில் டெர்ம் டெபாசிட் கணக்கைத் தொடங்குவது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்தக் கட்டுரையில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வெவ்வேறு வங்கிகள் 3 ஆண்டு வைப்புத்தொகை திட்டங்களுக்கு வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கப் போகிறோம். சிறந்த வங்கிகள் வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள்: ஹெடிஃப்சி வங்கி: மிகப் பெரிய தனியார் வங்கியான இது 3 ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 7 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அதே காலகட்ட வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 4 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களாக இருக்கும்போது, ​​ஆண்டுக்கு 7.4 சதவீதம் என்ற அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஜூலை 24, 2024 முதல் அமலுக்கு வந்தன. ஐசிஐசிஐ வங்கி: ஐசிஐசிஐ வங்கி அதன் 3 ஆண்டு கால நிரந்தர வைப்புத்தொகையில் (எஃப்டி) முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது. 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.25 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஆகஸ்ட் 10, 2024 முதல் அமலுக்கு வந்தன. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ): பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மூன்று ஆண்டு கால வைப்புகளுக்கு 6.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்கள் என்றால், அவர்களுக்கு தங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 7.25 சதவிகிதம் வட்டி பெற உரிமை உண்டு. 2-3 ஆண்டுகளுக்கு இடையில் உள்ள காலகட்டம் என்றால், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்த கட்டணங்கள் ஜூன் 15, 2024 முதல் அமலுக்கு வந்தன. பேங்க் ஆஃப் பரோடா: இந்த வங்கியில் மூன்று ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.15 சதவீதம் வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகையில் 7.65 சதவிகிதம் பெற உரிமை உண்டு. இந்த கட்டணங்கள் ஜூலை 15, 2024 முதல் அமலுக்கு வரும். Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! கோடக் மஹிந்திரா வங்கி: கோடக் மஹிந்திரா வங்கி 3 வருட நிலையான வைப்புகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 60 அடிப்படை புள்ளிகள் அதிகம், அதாவது 6 சதவீதம் வழங்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, 390 மற்றும் 391 நாட்களுக்கான டெபாசிட்களுக்கு இந்த வங்கியில் அதிகபட்ச வட்டி விகிதமான 7.4 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஜூன் 14, 2024 முதல் அமலுக்கு வந்தன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.