BUSINESS

அன்று சைக்கிளில் தின்பண்டங்கள் விற்பனை... இன்று ரூ.4,096 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் அதிபதி! யார் இவர்?

எளிமையான பின்னனியில் பிறந்து பல கோடி மதிப்புள்ள நிறுவனங்களின் உரிமையாளர்களாக உயர்ந்த எண்ணற்ற தனிநபர்களின் வெற்றிக் கதைகளுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. கோபால் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், அதன் நிர்வாக இயக்குநருமான பிபின் ஹத்வானி, வணிக உலகில் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவருடைய வாழ்க்கைப் பயணம் எதிர்கால தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. ஹத்வானியின் தந்தை கிராமத்தில் சிறிய கடையில் நம்கீன் (ஓரு வகையான பிஸ்கட்) வியாபாரம் செய்து வந்தார். சிறு வயதிலிருந்தே ஹத்வானிக்கு இந்த தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. வாயில் எச்சில் ஊற வைக்கும் குஜராத்தி தின்பண்டங்களைச் செய்யும் இவரது தந்தை, பின்னர் அதை சைக்கிளில் வைத்து ஒவ்வொரு கிராமமாக சென்று விற்பனை செய்வார். பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் ஹத்வானியும் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். தனது தந்தையுடன் சேர்ந்து பணியாற்றியதால் தொழிலில் நல்ல அனுபவம் பெற்றார் ஹத்வானி. அதன்பின்னர் 1990-ம் ஆண்டில் தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். தனது தந்தை ஜொடுத்த ரூ.4,500-யை பயன்படுத்தி ஆரம்பத்தில் ஒரு ஸ்னாக்ஸ் வியாபாரத்தை நண்பரோடு சேர்ந்து தொடங்கினார். இருப்பினும், நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஹத்வானி தனது வணிக கூட்டாளருடன் பிரிந்து செல்ல முடிவு செய்தார். முந்தைய பார்ட்னர்ஷிப்பில் கிடைத்த தனது பங்கான ரூ.2.5 லட்சத்தைப் பயன்படுத்தி, சொந்தமாக தனது தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கினார். 1994ஆம் ஆண்டில், ஹத்வானி ஒரு வீட்டை சொந்தமாக வாங்கினார். மேலும் தனது மனைவியின் உதவியுடன் கோபால் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தொழில் தொடங்கினார் ஹத்வானி. இருவரும் சேர்ந்து பாரம்பரிய தின்பண்டங்களை வீட்டில் இருந்தே தயாரிக்க ஆரம்பித்தனர். ஹத்வானி ராஜ்கோட்டின் தெருக்களில் சைக்கிளீல் சென்றபடியே அங்கிருக்கும் டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். உள்ளூர் சந்தையைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவே அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்தார். செய்தார். ஹத்வானியின் இடைவிடாத முயற்சியால், அவர்களுடைய தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. நுகர்வோர்களுக்கான தேவைகள் நிலையாக அதிகரித்து வந்த நிலையில், ஒரு தொழிற்சாலையை நிறுவ நகரத்திற்கு வெளியே இடத்தை வாங்கினார். தொலைதூர பகுதியில் ஆலை அமைந்திருந்ததால், அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், ஹத்வானி கடனைப் பெற்று நகருக்குள் ஒரு சிறிய ஆலையை நிறுவினார். காலப்போக்கில், இந்த புதிய ஆலை ஹத்வானியின் தொழிலுக்கு திருப்புமுனையாக அமைந்து போனது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! இன்று, கோபால் ஸ்நாக்ஸ் இந்தியாவில் உள்நாட்டுச் சுவையூட்டிகளின் சந்தை மதிப்பில் நான்காவது பெரிய பிராண்டாகவும், 2023 நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய கத்தியா மற்றும் சிற்றுண்டித் துகள்களின் உற்பத்தியாளராகவும் உள்ளது. தற்போது, ​​கோபால் ஸ்நாக்ஸ் ரூ.40.96 பில்லியன் (ரூ.4096 கோடி) சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.