BUSINESS

உமாங் ஆப்-ஐ பயன்படுத்தி PF பணத்தை எடுப்பது எப்படி? கைட்லைன்ஸ் இதோ!

மாதிரிப்படம் உங்களிடம் PF கணக்கு இருந்தால் உமாங் ஆப்-ஐ பயன்படுத்தி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ளலாம். EPFO உறுப்பினர்கள் தங்கள் இ-நாமினேஷனை முடித்தவுடன் தங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, முன்பணம் பெறுவது மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை சமர்ப்பிப்பது என அனைத்தையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம். இதை EPFO போர்ட்டல் அல்லது உமாங் ஆப் மூலம் செய்யலாம், பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு குறிப்பிட்ட தகுதி மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். உமாங் ஆப்-ஐ பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்தே தங்கள் PF கணக்குகளை நிர்வகிக்க முடியும். மேலும், உமாங் ஆப் மூலம் PF பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்காணிக்க, உமாங் ஆப்-பில் “EPFO” பகுதிக்குச் சென்று, உங்கள் கோரிக்கையின் நிலையை அறியலாம். உமாங் ஆப் பயன்படுத்தி PF பணத்தை எடுப்பது எப்படி? 1. உங்கள் மொபைலில் உமாங் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 2. ஆப்-ஐ ஓபன் செய்த பிறகு, உங்கள் விவரங்களுடன் லாகின் செய்து, சர்வீசஸ் பிரிவில் EPFO ​​விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 3. அடுத்து, “எம்ப்லாய் சென்ரிக் சர்வீசஸ் " என்ற பிரிவுக்குச் சென்று, “ரைஸ் க்ளைம்” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். 4. பின்னர் உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். 5. OTPயை என்டர் செய்த பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட தேவையான விவரங்களை வழங்கவும். 6. நீங்கள் செயல்முறையை முடித்தவுடன், நீங்கள் ஒரு ரெஃபரன்ஸ் நம்பரை பெறுவீர்கள். 7. உங்கள் கோரிக்கையின் நிலையைக் கண்காணிக்க, ஆப்-பில் இந்த ரெஃபரன்ஸ் நம்பரைப் பயன்படுத்தவும். 8. உமாங் ஆப் மூலம், உங்கள் PF பணத்தை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். உமாங் ஆப்-பில் PF பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்? 1. உங்கள் மொபைலில் ஆப்-ஐ ஓபன் செய்து, EPFO ​​விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 2. அடுத்து, ‘எம்ப்லாய் சென்ரிக் சர்வீசஸ்’ என்ற பிரிவுக்குச் சென்று, ‘வியூ பாஸ்புக்’ என்பதை கிளிக் செய்யவும். 3. பின்னர் உங்கள் UAN நம்பரை என்டர் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். 4. OTPயை என்டர் செய்த பிறகு, உங்கள் பேலன்ஸ் விவரங்கள் ஸ்கிரீனில் பார்க்கலாம். Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! உமாங் ஆப்-ல் கிடைக்கும் சில EPFO ​​சேவைகள்: 1. PF பேலன்ஸை செக் செய்யவும் 2. கிளைம் செய்யவும் 3. KYC விவரங்களைப் அப்டேட் செய்யவும் 4. பாஸ்புக்கை பார்க்கவும் 5. ஜீவன் பிரமான் சான்றிதழை உருவாக்கவும் 6. பென்ஷன் பெமென்ட் ஆர்டர் (PPO) டவுன்லோட் செய்யவும் 7. குறைகளை பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.