BUSINESS

நேர்காணலுக்கு செல்லும்போது இதையெல்லாம் கவனிங்க... முக்கிய விஷயங்கள்!

வேலை தேடுபவர்கள் அனைவரும் நேர்காணல் சென்று வேலை தேடுவது வழக்கம். அப்படி நேர்காணலுக்கு செல்லும் போது ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவது முக்கியமானது. உங்களுக்கு நற்பெயரை பெற்றுத்தரவும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்ப்பதற்கும், வேலையில் உங்கள் உண்மையான ஆர்வத்தை நிரூபிக்கவும் இது உதவும். நீங்கள் சந்திக்கும் நபர்களை மதித்து நடப்பது, சரியான ஆடை அணிவது, சரியான நேரத்தில் நேர்காணலுக்கு வருவது உள்ளிட்ட அணைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துவது அவசியம். கூடுதலாக, நிறுவனம் பற்றிய முழுமையான புரிதல் உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும். நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு செல்லுங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது சரியான நேரத்திற்கு அங்கு இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். தாமதமாக செல்வது உங்கள் நேர்காணல் அனுபவத்திற்கு தீங்கு விளைவிக்கும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் முன்னதாக கூட செல்வது நல்லது. தாமதகமாக சென்றால் உங்கள் மீது அதிருப்தி வரக்கூடும். பொய் சொல்லாதீர்கள் நேர்காணலில் உண்மையாக இருப்பது அவசியம், நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு மரியாதையை பெற்று தருவது மட்டுமின்றி, உங்கள் மீது நெகடிவ் எண்ணங்கள் வராமல் தவிர்ப்பதற்கும் அவசியம். உங்கள் திறன்களையும், சாதனைகளையும் பெரிதுப்படுத்தி காட்டுங்கள் தவறில்லை ஆனால் அதில் பொய் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது நீங்கள் நேர்மையாக இருங்கள், நீங்கள் யார் என்பதில் உண்மையாக இருங்கள். உங்கள் பதில்களை தைரியமாக சொல்லுங்கள், தயக்கமான கருத்துக்களைத் தவிர்க்கவும், தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பேசுவது முக்கியம். மேலும் நேர்காணலின் போது உங்கள் குறைபாடுகளை நீங்கள் முன்னிலைப்படுத்த கூற வேண்டாம். Also Read | பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே! ஆடை தேர்வில் கவனம் தேவை நேர்காணலுக்கு ஆடை அணியும்போது, ​​ஆடை தேர்வில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம். சாதாரண உடை மற்றும் பிரகாசமான வண்ணங்களைத் தவிர்க்கவும். லைட் நிற உடைகளை தேர்வு செய்து அணிந்து செல்லுங்கள். மென்மையாகப் பேசுங்கள் உங்கள் நேர்மறையான நடத்தையை உறுதிப்படுத்த பேசும்போது கவனம் தேவை. உங்கள் பேச்சில் கனிவும், மென்மையும் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் . இதனால் உங்கள் மீது பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகும். நீங்கள் வேலைக்கு சிறந்த நபர் என்பதை நிரூபிக்க உங்கள் பேச்சில் இனிமை இருக்க வேண்டும். மேலும் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் அப்போது தான் நீங்கள் அவற்றை தெளிவாக எடுத்து கூற முடியும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.