BUSINESS

TOP 10 Bank | உலகின் சிறந்த டாப் 10 வங்கிகள் எவை தெரியுமா? RBI-க்கு எந்த இடம்?

ரிசர்வ் வங்கி ஒரு நாட்டினுடைய மத்திய வங்கி என்பது நிலையான பணவியல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதன் மூலமும் அந்த நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக்கென்றே சிறப்புத் துறைகளைக் கொண்டுள்ளன. உலக நாடுகளில் இருக்கும் வங்கிகளின் மொத்த செல்வம் அந்தந்த நாடுகளின் பொருளாதார கண்ணோட்டம் மற்றும் நிலையை பிரதிபலிக்கிறது. ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கு இருக்கும் சொத்துக்கள் மூலம் அந்த நாட்டினுடைய பொருளாதார வளம் மதிப்பிடப்படுகிறது. அதே போல மத்திய வங்கிகளின் இருப்புநிலை (balance sheet) அந்தந்த நாட்டினுடைய பொருளாதார ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. மத்திய வங்கிகளின் சொத்துக்களை மதிப்பிடும் போது, ​​பல காரணிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன. இதில் monetary gold, வெளிநாட்டு கரன்சி இருப்புகள், ஸ்பெஷல் ட்ராயிங் ரைட்ஸ், அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) குறிப்பிட்ட நாட்டினுடைய ரிசர்வ் பொசிஷன்ஸ் ஆகியவை அடக்கம். இவை குறிப்பிட்ட மத்திய வங்கியின் நிதி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விஷயங்கள் ஆகும். இதனிடையே 2024-ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார மத்திய வங்கிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. 7.84 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுடன் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் சிஸ்டம் உலகின் பணக்கார மத்திய வங்கியாக திகழ்கிறது. இதனிடயே உலகின் பணக்கார மத்திய வங்கிகளின் தரவரிசையில் ஐரோப்பிய மத்திய வங்கிகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகின் டாப் 10 பணக்கார மத்திய வங்கிகளில் ஐரோப்பாவை தளமாக கொண்ட 7 வங்கிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 7 வங்கிகளின் மொத்த மதிப்பு 11.09 டிரில்லியன் டாலர்கள் ஆகும். அதே நேரம் இந்த டாப் 10 பட்டியலில் ஆப்பிரிக்காவை சேர்ந்த மத்திய வங்கிகள் எதுவுமே இடம்பெறாதது பெருகிவரும் பணவீக்கம், பலவீனமான நிதி சந்தைகள் மற்றும் பலவீனமான பணவியல் கொள்கை பரிமாற்ற அமைப்பு உட்பட ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பல சவால்கள் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் ரிசர்வ் வங்கி டாப் 10 பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் உலகளவில் ஒப்பிடும் போது 12வது இடத்தில் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை மார்ச் 31, 2024 நிலவரப்படி year on year 11.08% அதிகரித்து ரூ.70.47 டிரில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்க: நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர் ஹசீனா.. அடுத்து எங்கு செல்வார்? மகன் சஜீப் பரபரப்பு பேட்டி! மொத்த சொத்துக்களின் அடிப்படையில் உலகின் டாப் 10 பணக்கார மத்திய வங்கிகளின் பட்டியல்: 1. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் சிஸ்டம் : 7.84 டிரில்லியன் டாலர் 2. சீனாவின் பீப்புள்ஸ் பேங்க் ஆஃப் சீனா - 6.00 டிரில்லியன் டாலர் 3. ஜப்பானை சேர்ந்த பேங்க் ஆஃப் ஜப்பான் - 5.55 டிரில்லியன் டாலர் 4. ஜெர்மனியை சேர்ந்த Deutsche Bundes பேங்க் - 2.77 டிரில்லியன் டாலர் 5. ஃபிரான்ஸை சேர்ந்த பேங்க் ஆஃப் பிரான்ஸ் - 2.01 டிரில்லியன் டாலர் 6. நார்வே-வை சேர்ந்த Norges பேங்க் - 1.63 டிரில்லியன் டாலர் 7. இத்தாலியை சேர்ந்த பேங்க் ஆஃப் இத்தாலி - 1.38 டிரில்லியன் டாலர் 8. யுனைட்டட் கிங்டம்-ஐ சேர்ந்த பேங்க் ஆஃப் இங்கிலாந்து - 1.28 டிரில்லியன் டாலர் 9. ஸ்பெயினை சேர்ந்த பேங்க் ஆஃப் ஸ்பெயின் - 1.04 டிரில்லியன் டாலர் 10. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்விஸ் நேஷ்னல் பேங்க் - 9.4 பில்லியன் டாலர் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.