BUSINESS

வீடு கட்ட திட்டமா... மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டம்... யாரெல்லாம் பயன் பெறலாம்.? ஏ டூ இசட் தகவல்கள்!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) 2.0 திட்டத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள பல்வேறு பிரிவு மக்கள்மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தி சுமார் 1 கோடி வீடுகளை கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. . இத்திட்டத்தில் அரசு 2.30 லட்சம் கோடி ரூபாய் மானியம் அளிக்கும். இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்ட அரசு நிதியுதவி அளிக்கும். PMAY-U 2.0 திட்டம் என்றால் என்ன? PMAY-U 2.0 திட்டமானது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் மற்றும் நகர்ப்புறத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு நகர்ப்புறங்களில் நியாயமான விலையில் வீடுகளைக் கட்ட, வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க நிதி உதவி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசினுடைய PM India வெப்சைட்டில், இந்த திட்டம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் குறிக்கோளுடன் ஒத்து போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. PMAY-U 2.0 திட்டத்தால் யாரெல்லாம் பயனடைவார்கள்..? PM India வெப்சைட்டின்படி, இந்த திட்டத்தின் கீழ் குடிசைவாசிகள், எஸ்சி/எஸ்டி, சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளிட்ட விளிம்புநிலை குழுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். தவிர கூடுதலாக, சஃபாய் கர்மி, தெருவோர வியாபாரிகள், கைவினைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சேரி/சாவல்களில் வசிப்பவர்கள் போன்ற பிரிவினருக்கும் இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படிக்க: 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்கள்… 5 வங்கிகளின் லிஸ்ட்! PMAY திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான தகுதி : PMAY-U 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS), குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் (LIG), மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட (MIG) பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் தற்போது நாடு முழுவதும் எங்கும் நிரந்தர வீடு இல்லாத குடும்பங்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறுவதற்கான வருமான அளவுகோல்கள் பின்வருமாறு: - ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட EWS (Economically Weaker Section) பிரிவை சேர்ந்த குடும்பங்கள் - ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம்- ரூ.6 லட்சம் வரை உள்ள LIG (Low Income Group) பிரிவை சேர்ந்த குடும்பங்கள் - ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம்- ரூ.9 லட்சம் வரை உள்ள MIG (Middle Income Group) பிரிவை சேர்ந்த குடும்பங்கள் இந்த திட்டம் நகர்ப்புறங்களில் மலிவு விலை வீட்டு தேவையை பின்வருபவை மூலம் நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக PM India வெப்சைட் தெரிவித்துள்ளது. பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம் (BLC) : இதன் கீழ் EWS பிரிவைச் சேர்ந்த தனிப்பட்ட தகுதியுள்ள குடும்பங்களுக்கு, தங்களுக்கு கிடைக்கக்கூடிய காலி நிலத்தில் புதிய வீடுகளைக் கட்ட நிதி உதவி வழங்கப்படும். நிலமற்ற பயனாளிகளுக்கு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நில உரிமைகள் (பட்டாக்கள்) வழங்கப்படலாம். மலிவு விலை வீடுகள் (AHP) : இதன் கீழ், மாநிலங்கள்/UTs/நகரங்கள்/பொது/தனியார் ஏஜென்சிகள் மூலம் வெவ்வேறு பார்ட்னர்ஷிப்களுடன் கட்டப்படும் வீடுகளை சொந்தமாக வைத்திருக்க EWS பிரிவினருக்கு நிதி உதவி வழங்கப்படும். மலிவு வாடகை வீடுகள் (ARH) : இது வேலை செய்யும் பெண்கள்/தொழில்துறை தொழிலாளர்கள்/ நகர்ப்புற புலம்பெயர்ந்தோர்/வீடற்றோர்/ ஆதரவற்றோர்/மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள பிற பயனாளிகளுக்கு போதுமான வாடகை வீடுகளை உருவாக்கி கொடுக்கும். சொந்தமாக வீடு வாங்க விரும்பாத, ஆனால் குறுகிய கால அடிப்படையில் வீடு தேவைப்படும் அல்லது வீடு கட்ட/வாங்கும் நிதி திறன் இல்லாத நகர்ப்புறவாசிகளுக்கு மலிவு மற்றும் சுகாதாரமான வாழ்க்கை இடங்களை இந்த ARH உறுதி செய்யும். இதையும் படிக்க: ஹோம் லோனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கனுமா..? அப்ப இந்த 7 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க! வட்டி மானிய திட்டம் : ரூ.35 லட்சம் மதிப்புள்ள சொத்துடன் ரூ.25 லட்சம் வரை கடன் பெறக்கூடியவர்கள் அதிகபட்சமாக 12 ஆண்டுகளுக்கு முதல் ₹8 லட்சம் கடனுக்கு சுமார் 4% வட்டி மானியத்தை பெறலாம். தகுதியுடைய பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் மானியமாக ஐந்தாண்டு தவணைகளில் செலுத்தப்படும். ஸ்மார்ட் கார்டுகள், வெப்சைட்டுகள் அல்லது OTP-க்கள் மூலம் பயன் பெறுவோர் தங்கள் அக்கவுண்ட்ஸ்களை அணுகலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.