NILGIRIS

சிட்டுக்குருவி கூட்டத்திற்கு வாழ்வாதாரமான மரம்... வாழவைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்...

சிட்டுக்குருவி கூட்டத்திற்கு வாழ்வாதாரமான மரம்... வாழவைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்... நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். நீலகிரிக்கு வருகை தரும் பயணிகளைக் கவரும் வகையில் பல பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள், ரயில் நிலையங்கள், மலை ரயில், இயற்கைக் காட்சிகள், வன உயிரினங்கள் என பல அம்சங்கள் உள்ளன. பயணிகளுக்காகப் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுவதால் நீலகிரியின் முக்கிய பகுதியான ஊட்டி நகரப் பகுதியில் உள்ள பல மரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் கட்டிடங்களாக மாறின. இந்நிலையில் ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் அருகே அஞ்சலாந்து பகுதியில் உள்ள மரம் பல சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் ஒரு மரம் கூட இல்லாத பட்சத்தில் இந்த மரம் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதையும் படிங்க: அந்தரத்தில் நிற்கும் அதிசய பாறை… கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை பாறை இங்கேயும் இருக்கு… இதன் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் இந்த இடத்தில் சிட்டுக்குருவிகளுக்கு நீர் மற்றும் சிறு தானியங்கள் அளித்து வருகின்றனர். இந்த மரத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 200க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வந்த அமர்ந்து இளைப்பாறிக் கூடுகட்டி விளையாடி மகிழ்கின்றன. இருக்கும் இடத்தில் எல்லாம் மனிதர்கள் ஆக்கிரமிப்பில் கட்டிடங்களும் நவீனமயமாக்கலும் நடைபெற்று வரும் சூழலில், சிட்டுக்குருவிகளுக்கு தினம்தோறும் நீர் மற்றும் சிறுதானியங்களை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ராஜா கூறுகையில், “தினம்தோறும் ஏராளமான சிட்டுக்குருவிகள் வருகின்றன. இந்த மரத்தை அகற்றுவதற்கும் இந்தப் பகுதியில் உள்ள சிங்கமுகம் கொண்ட தண்ணீர் குழாயினை அகற்றக்கூடாது எனவும் நாங்கள் போராடியுள்ளோம். இந்த பறவைகள் தினமும் வருவதால் மாலை மற்றும் காலை நேரங்களில் அதன் சத்தமே அருமையாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.