NILGIRIS

Kalai Thiruvizha: மணல் சிற்பம் செய்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்... மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு...

மணல் சிற்பம் செய்து அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்... மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு... ஊட்டியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் மணல் சிற்பத்தில் சிறப்பு புரிந்து மாநில அளவில் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவன். தமிழ்நாடு முழுவதும் கலைத் திருவிழா அரசின் மூலமாக வெகு விமர்சிக்கக் கொண்டாடப்படுகிறது. பள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளை அறிந்து அவற்றை வெளிக்கொண்டுவரும் பொருட்டு பல்வேறு கலைகள் ஊக்குவிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சென் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவர்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். இதையும் படிங்க: Spicy Crab Recipe: மணக்க மணக்க நண்டு மசால்… இப்படி செஞ்சு பாருங்க சுவை நாக்கில் நிக்கும்… தூனேரி அரசு மாதிரிப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் பாலாஜி என்ற மாணவன் சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவராகத் திகழ்கிறார். இவர் களிமண்களைக் கொண்டு விநாயகர் சிலைகளைச் செய்வதிலும் ஆர்வம் கொண்டு சிலைகளையும் செய்து கொடுத்திருக்கிறார். தற்பொழுது ஊட்டியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் சாதாரண மணலைப் பயன்படுத்தி அதன் மூலமாக ஒரு சிறிய வடிவமைப்பை உருவாக்கி மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வரும் மாணவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகள் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவே கருதப்படுகிறது. மாநில அளவில் மணல் சிற்பத்தின் மூலமாகத் தேர்வாகியிருக்கும் பாலாஜி கூறுகையில், “சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளது. 7ஆம் வகுப்பு முதல் மண்ணினால் பொம்மைகளைச் செய்வதிலும் ஆர்வம் காட்டினேன். ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வாகியுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: ஷாருக்கானை ஆட்டம் போட வைத்த இடம்… UNSCO அந்தஸ்து பெற்ற லவ்டேல் ஸ்டேஷனின் Tale தெரியுமா… மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியை பார்வதி கூறுகையில், “கடந்த ஆண்டும் எங்கள் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் போட்டிகளுக்குச் சென்றனர், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டும் 12ஆம் வகுப்பு பயிலும் பாலாஜி தேர்வாகியுள்ளார். இவர் வெற்றியுடன் வருவார் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு நல்கி பாலாஜியின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளனர், மென்மேலும் சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.