NILGIRIS

நீலகிரியில் மலைகள் தினம்... மலைகளின் மகிமையை உணர்த்த ஐநா எடுத்த முன்னெடுப்பு...

நீலகிரியில் மலைகள் தினம்... மலைகளின் மகிமையை உணர்த்த ஐநா எடுத்த முன்னெடுப்பு... மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கிய மாவட்டமான நீலகிரி உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. உயிர்க்கோளத்தின் மிக முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. நீலகிரி மலைகள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா வரை பரவியுள்ளது. இந்த மலைகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாகும், மேலும் சுமார் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. நீலகிரி மலைகளானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஒரு சந்திப்பாகும். ஊட்டி அவற்றுள் அமைந்துள்ள மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். நீலகிரி மலைகளின் ராணி என்று குறிப்பிடப்படும் ஊட்டி, இந்த கம்பீரமான பகுதிக்கு நுழைவாயிலாக விளங்குகிறது. இதையும் படிங்க: சாபத்தில் உருவானதா தேரிக்காடு… கள்ளர் வெட்டுத் திருவிழாவின் வியக்க வைக்கும் பின்னணி… இந்த நகரம் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாக உள்ளது. பெங்களூரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. மலை மாவட்டத்தில் மலை முகடுகளிலும் மலைகளிலும் மலை விவசாயிகள் காய்கறிகளைப் பயிர் செய்து வருகின்றனர். மேலும், தேயிலைத் தோட்டங்களும் இந்த மலைப்பகுதியில் பரவியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைகள் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளதாக விளங்குகிறது. இங்கு பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களும், வன உயிரினங்கள் வாழும் அடர்ந்த மலைப் பகுதிகளும் இங்கு உள்ளது. இந்த மலைகளின் சிறப்புகள் குறித்து நீலகிரி ஆவணக் காப்பக உரிமையாளர் வேணுகோபால் கூறுகையில், “இந்த நாள் மிகவும் முக்கியமானதாகும். மலைகளில் உள்ள பிரச்சினைகளை அந்த மலைப் பிரதேசங்களில் வாழ்க மக்களும் அரசும் சேர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். 2002ஆம் ஆண்டு ஐநா சபையில் மலைகளின் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. தற்பொழுது 22 ஆண்டுகள் ஆயினும் மலைகள் தினம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இல்லை. இதையும் படிங்க: Karthigai Deepam 2024: கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் விளக்கு ஏற்றும் முறை… என்னென்ன பலன்கள் இருக்கு தெரியுமா… நாங்கள் ஆரம்பக் காலகட்டத்தில் ஜான் சலீவன் சிறுமுகையிலிருந்து ஊட்டிக்கு வருகை புரிந்த பாதையிலே பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். உலக அளவில் மலைகள் சர்வதேசப் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் இந்த தினத்தை அனுசரித்துக் கொண்டாட வேண்டும் மலைகளின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்” எனத் தெரிவித்தார். கவிஞர் நாகராஜ் கூறுகையில், “மூன்று மாநிலங்களை இணைக்கும் ஒரு இடமாக நீலகிரி மலைகள் உள்ளன. இதற்காகவே நீலகிரி மாவட்டம் எனப் பெயரும் வந்துள்ளது. மலைகளின் இடையே ஓடும் ரயில் பாதைகளும் நீலகிரி தான் உள்ளது. மேலும் மிக உயர்ந்த சிகரங்களைக் கொண்ட தொட்டபெட்டா சிகரங்கள் நீலகிரி மலை மாவட்டத்தில் தான் உள்ளது. இதனைக் காண நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் இயற்கைக் காட்சிகளையும் மலை அழகையும் கண்டு ரசிக்க வேண்டும். மேலும், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும்” எனவும் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.