NILGIRIS

செலவும் கம்மி... லாபம் ஜாஸ்தி... எருமை வளர்ப்பில் இவ்வளவு விஷயமிருக்கா..!

செலவும் கம்மி... லாபம் ஜாஸ்தி... எருமை வளர்ப்பில் இவ்வளவு விஷயமிருக்கா..! நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடலூர் சாலையிலிருந்து சான்டிநல்லா பகுதியில் அமைந்துள்ளது காடி மந்து. இந்த பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் குட்டன். இவர் முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாகப் பின்பற்றி வந்த எருமை வளர்ப்பினை இன்றளவும் பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். எந்த கலப்பின எருமைகளும் இல்லாமல் ஒரே ரகமான 74 எருமைகளை இவர் வைத்துள்ளார். இதற்காக ஒரு நாளைக்குப் பராமரிப்பு வகையில் பெரிதளவில் எந்த செலவும் செய்வதில்லை. இயற்கையான மேய்ச்சல் முறையிலேயே இந்த எருமைகள் மேய்கின்றது. அதன் பின்னர் இரவு நேரங்களில் ஓரிடத்தில் கொண்டு வந்து அடைக்கப்படுகிறது. பால் கறக்கும் எருமைகளை வெளியில் படுக்க வைத்து, மற்றவற்றைக் கொட்டகைக்கு உட்பகுதியில் அடைக்கப்படுகிறது. இவர்கள் வாழும் பகுதி முன்பெல்லாம் மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததால் எருமைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்தது. தற்பொழுது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதற்குக் காரணம் மேய்ச்சல் நிலங்கள் குறைந்துள்ளது தான். மேலும் வனவிலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளதால் எருமைகள் பாதிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவிக்கின்றார். இதையும் படிங்க: LPG iron box: மலை போல துணி கிடந்தாலும் வேலை மளமளன்னு முடியும்… அப்டேட்டட் இஸ்திரி கடை… ஒரு எருமை ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை பால் கறக்கின்றது. எருமைப்பால் மிகவும் கெட்டி தன்மை வாய்ந்ததாகவும், அதிகத் தரத்துடனும் உள்ளதால் ஒரு லிட்டர் 45 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர். மேலும் பாலின் மூலமாகத் தயிர், மோர், நெய், வெண்ணெய் ஆகியவையும் ரஞ்சித் குட்டன் விற்பனை செய்கின்றனர். தோடர் பழங்குடி மக்களின் வாழ்வியலில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் எருமைகள் முக்கிய அங்கம் வகிக்கிறது என அவர் கூறுகிறார். இம்மக்கள் எருமைகள் பிறந்த உடனேயே ஒவ்வொரு எருமைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டுகின்றனர். அதன் பின்னர் எருமையின் பாலை கொண்டு போய் இவர்களது குலதெய்வத்திற்கு வழிபாடும் செய்கின்றனர். பாரம்பரியமாகக் கோவில் எருமைகள் உள்ளது, அதிலிருந்து பாலை யாரும் கரப்பதில்லை. தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே அந்த எருமையின் பாலை பயன்படுத்துவோம் எனவும் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் சுற்றுச்சூழல் அதிக வெப்பத்தன்மை கொண்டதாக இருப்பதால் எருமைகள் நீர் நிலைகளில் உள்ள சேற்றில் உருண்டு விளையாடுமாம். பகல் முழுதும் மேய்ச்சலுக்கு பின்னர் மாலை வேலைகளில் சுத்தமாக நன்கு குளிப்பாட்டியதைப் போல இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஆவின் மில்க் ஷேக் வழங்கும் பள்ளி… இந்த Eat Right School பற்றி தெரியுமா..? எருமைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ரஞ்சித் குட்டன் கூறுகையில், “பாரம்பரியமாக எருமை வளர்த்து வருவதற்காக எனக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. எங்களுடைய பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சடங்கிற்கும் எருமைகளை வைத்து செய்கின்றோம். எங்களுடைய எருமைகளுக்கு நோய்வாய் என்பது வரவே வராது. வனவிலங்குகளாலும் வேறு வழிகளிலும் பாதிப்பு ஏற்பட்டால் தவிர இயற்கையாக எருமைகள் ஆரோக்கியமாக இருக்கும். பொதுவாக எருமைகளுக்குக் கால் புண் மற்றும் வாய்ப்புண் ஏற்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமாவாசை தினத்தில் 7 வகையான முள் இலைகளைக் கொண்டு வந்து 7 குழிகளுக்குள் வைத்து விடுவோம். அதன் பின்னர் அங்கு புகை மூட்டி அதனை எருமைகள் சுவாசிக்கும் வண்ணம் அந்த குழிகளுக்குள் நடக்கச் செய்வோம். அவ்வாறு நடந்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த நோய் மீண்டும் வராது. புலி, சிறுத்தை போன்றவை தாக்க வந்தால் அனைத்து எருமைகளும் ஒன்றாக நின்று கொள்ளும். நாமும் மேய்ச்சலுக்கு சென்றால் நம்மையும் பாதுகாத்து விடும். யானையும், எருமையும் ஒன்றாக மேய்ந்திருப்பதை அவலாஞ்சி பகுதிகளில் நாங்களே பார்த்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.