NILGIRIS

Ancestral Stones: இறந்தவர்களுக்குச் சிலை செய்யும் பழங்குடி மக்கள்... திகிலூட்டும் வினோத வழிபாடு...

இறந்தவர்களுக்குச் சிலை செய்யும் பழங்குடி மக்கள்... திகிலூட்டும் வினோத வழிபாடு... நீலகிரியில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வியலில் அவர்களது குடும்பத்தில் யாரோ ஒருவர் தவறும் பட்சத்தில், அவர்களை நினைவில் கொள்ளும் விதமாக வனப்பகுதிக்குள் உள்ள ஆறுகளிலிருந்து பழைய கல்லைக் கொண்டு வந்து அவர்களுடைய நினைவிடத்தில் வைக்கின்றனர். முன்பெல்லாம் ஆறுகளிலிருந்து கொண்டுவரப்படும் கற்கள் எந்த வடிவில் உள்ளதோ அந்த வடிவிலேயே அவை வைக்கப்பட்டு முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் போட்டோ கலாச்சாரம் தெரிய வந்தவுடன் அவர்களது குடும்பத்தினர் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய உருவங்களைக் கற்களில் செதுக்கி, அவர்களின் நினைவாக வைக்கின்றனர். இந்த நடைமுறை 1980க்கு மேல் தான் உருவானது என தெரிவிக்கின்றனர் உள்ளூர் வாசிகள். கீழ் கோத்தகிரி பகுதியில் கருக்கையூர் எனும் கிராமம் இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் இருளர்கள் பழங்குடியின மக்கள் இந்த பாரம்பரியக் கல் குறித்து விளக்குகையில், சமீபத்தில் இந்த கல் சிலையை வைப்பதற்காக ஒரு இடத்தை அமைத்து வருகிறோம். அந்த பணிகள் நடைபெற்று வருவதால் சிலை கற்களை வெள்ளை நிறத் துணிகளைக் கொண்டு மூடி வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். இதையும் படிங்க: PAN 2.0: பழைய பான் கார்டு இனி செல்லாதா… புதிய கார்டில் என்னென்ன வசதி இருக்கு தெரியுமா..? இந்தக் கல்லைப் பற்றி விவரிக்கையில் தெய்வத்தையும் கல்லைக் கொண்டு வணங்குகிறோம். அதேபோல இறந்தவர்களுக்கும் ஒரு கல்லை அவர்களை நினைவிடத்தில் வைத்து அவர்களும் தெய்வமானார்கள் என எண்ணி வழிபாடு செய்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த கல் குறித்து கருக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், “மூதாதையர் காலத்திலிருந்து இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறோம். நவீன வளர்ச்சியின் காரணமாக தற்பொழுது சிலைகளை உருவாக்கியுள்ளனர். வருடத்திற்கு ஒருமுறை அந்த கற்களுக்குப் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகிறோம். எங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து தலைமுறைக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக் கொடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார். கிராமத்தின் தலைவர் அய்யாசாமி கூறுகையில், “நாங்கள் 12 குலங்களைக் கொண்டு வாழ்ந்துள்ளோம். அந்த முறையில் நாங்கள் படையலிடும் பொருட்களை மற்றொரு குலத்தின் முறைக்காரர் ஒருவர் அதனைப் படைப்பார். பாரம்பரிய மாறாமல் நடந்து வருகிறது. முன்பெல்லாம் இந்த பகுதிகளுக்குச் செல்லவே பயமாக இருக்கும். 12 குலங்களுக்கு 12 சுடுகாடுகள் உள்ளது” எனவும் தெரிவிக்கின்றார். இதையும் படிங்க: Karthigai Deepam: கலர்கலரா கலைநயம் பொங்கும் விளக்குகள்… கார்த்திகைக்கு களைகட்டும் விற்பனை… இயற்கையோடு ஒன்றிணைந்து வனத்திற்குள் வாழும் இந்த இருளர் பழங்குடியின மக்களின் இந்த கல் வழிபாடு முறை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நவீன யுகத்திலும் இன்றைய தலைமுறையினர் அந்த கற்களில் அவர்களுடைய உருவங்களைச் செதுக்கியும், பிறந்த தேதி, மறைந்த தேதியைச் செதுக்கியும் அவர்களது நினைவாக நட்டு வைக்கின்றனர். பொங்கல் திருவிழாவிற்கு அடுத்த நாள் இந்த கல் சிலைகளுக்குப் படையல் இட்டு வழிபாடும் செய்கின்றனர் இந்த இருளர் பழங்குடியின மக்கள். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.