NILGIRIS

திரைத்துறைக்கு ஃபேவரைட்டான நீலகிரியில் தியேட்டரின் நிலை.. பொழுதுபோக்கின்றி மக்கள் ஏக்கம்..

திரைத்துறைக்கு ஃபேவரைட்டான நீலகிரியில் தியேட்டரின் நிலை.. பொழுதுபோக்கின்றி மக்கள் ஏக்கம்.. உலகம் முழுவதிலும் திரைத்துறை என்பது கொடிகட்டிப் பறந்து வருகிறது. அதிலும் திரைப் பிரபலங்களின் பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுவோர் ஏராளம். நீலகிரி மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக ஊட்டியில் பல்வேறு திரைப்படங்கள் 80ஸ்களில் இருந்து இன்று வரையிலும் பல திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்களுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. உலகம் முழுவதிலும் கோடிகளைக் குவிக்கும் திரைப்படங்கள் பல்வேறு திரையரங்குகளில் திரையிட்டாலும் மலை மாவட்டமான நீலகிரியில் மக்கள் திரையரங்குகளுக்குச் செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது. சமவெளிப் பகுதிகளில் பொழுதுபோக்கிற்காகத் திரையரங்குகளை மக்கள் நாடி செல்கின்றனர். இதையும் படிங்க: NIACL Recruitment: டிகிரி இருந்தா போதும் ரூ.40,000 சம்பளம்… மத்திய அரசின் NIACLஇல் 500 காலிப்பணியிடங்கள்… ஆனால் மலை மாவட்டங்களில் திரையரங்கிற்கு மக்கள் செல்வது வெகுவாகக் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் குளுகுளு காலநிலையா. இல்லை திரைப்படத்தை விட பொழுது போக்கிற்கு அதிகமான அம்சங்களைக் கொண்டுள்ளதாக என ஆராய வேண்டி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இறந்த இடத்தில், தற்பொழுது ஓரிரண்டு திரையரங்குகளே உள்ளது என்பது சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏமாற்றமாகவே உள்ளது. இது குறித்து கணபதி திரையரங்க பணியாளர் அசோக் குமார் கூறுகையில், “40 ஆண்டுகளாக இந்த திரையரங்கில் பணிபுரிந்து வருகிறேன். முக்கியமான நடிகர்கள் படம் என்றால் மட்டுமே மக்கள் கூட்டம் வரும். சமவெளிப் பகுதிகளைப் போல மலை மாவட்டத்தில் திரையரங்குகளுக்கு மக்கள் வருவதில்லை. முன்பிருந்த திரைப்படத்தின் மோகம், தற்பொழுது இன்டர்நெட் மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: Minor PAN Card: உங்க குழந்தையின் எதிர்காலத்திற்கு முதலீடு பண்ணுறீங்களா… அப்போ மைனர் பான் கார்டு பற்றி தெரிஞ்சுக்கோங்க… உள்ளூர்வாசியான உமாசங்கர் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்திலேயே 2 திரையரங்குகள் மட்டுமே உள்ளது. தற்போதைய தலைமுறை இளைஞர்கள் தரமான சவுண்ட் குவாலிட்டி மற்றும் பிக்சர் ஆகியவற்றைப் பார்க்கின்றனர். சமீபத்தில் இணையதளம் மூலமாக திரைப்படங்கள் அனைத்தும் வெளிவந்து விடுவதால் திரையரங்குகளில் பணம் கொடுத்துப் பார்க்க விரும்புவதில்லை. ஊட்டியில் உள்ள திரையரங்குகளில் தரத்தினை உயர்த்தி அதற்கு ஏற்ப சுற்றுச்சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே உள்ளூர் மக்களையும் ஈர்க்க முடியும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.